சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

பிக் பாஸ் வருகையால் ஊத்தி மூடும் ரியாலிட்டி ஷோ.. டிஆர்பி இல்லாததால் விஜய் டிவி எடுத்த முடிவு

Bigg Boss: ரியாலிட்டி ஷோ என்றாலே அது விஜய் டிவி தான் என பெயர் எடுத்து விட்டது. அந்த அளவிற்கு சின்னத்திரை ரசிகர்களை கவரும் விதமாக பல என்டர்டைன்மென்ட் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்கின்றனர். அதிலும் இப்போது ரசிகர்களின் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கும் முக்கிய ரியாலிட்டி ஷோவை விரைவில் முடித்துவிட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியை துவங்கப் போகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் மற்றும் நடிகை ராதிகா நடுவர்களாக பங்கேற்ற ‘கதாநாயகி’ என்ற நிகழ்ச்சியை துவங்கினர். இந்த நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியின் அடுத்த கதாநாயகி யார் என்பதை தேர்வு செய்யப் போவதாக கூறி, தொடக்கத்தில் இருந்தே இந்த ஷோவை பரபரப்பாக்கினர்.

Also Read: குக் வித் கோமாளி-யில் விட்டதை பிக் பாஸில் பிடிக்க வரும் நடிகை.. குத்தகைக்கு எடுத்த விஜய் டிவி

இதில் பங்கேற்கும் போட்டியாளர்களுள் ஒருவருக்கு விஜய் டிவியில் எடுக்கும் புதிய சீரியலில் கதாநாயகிய நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இன்னும் இரண்டு வாரத்தில் கிராண்ட் பினாலேவை நடத்தி யார் வெற்றியாளர் என்பதை அறிவிக்கப் போகின்றனர்.

ஏனென்றால் கதாநாயகி ஷோவிற்கு விஜய் டிவி எதிர்பார்த்த அளவு டிஆர்பி கிடைக்காததால் இந்த நிகழ்ச்சியை விரைவில் முடித்துவிட்டு அடுத்ததாக வரும் அக்டோபர் மாதத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை துவங்கப் போகின்றனர். இதற்கான ப்ரோமோ சமீபத்தில் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிற வைத்துள்ளது.

Also Read: எதிர்நீச்சலை டம்மியாக்கி முதல் இடத்திற்கு தாவும் சீரியல்.. குணசேகரன் இல்லாததால் சூடு பிடிக்கும் மற்ற சேனல்கள்

மேலும் பிக் பாஸ் சீசன் 7ல் மற்ற சீசன்களை காட்டிலும் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளனர். இந்த முறை ஒன்று அல்ல இரண்டு வீட்டில் தனித்தனியாக போட்டியாளர்களை பங்கேற்க வைத்து, இன்னும் சுவாரசியத்தை அதிகப்படுத்த போகின்றனர்.

இருப்பினும் இந்த கதாநாயகி ரியாலிட்டி ஷோ சின்னத்திரை ரசிகர்களுக்கு பிடித்தமானது தான். அதனால் பிக் பாஸ் சீசன் 7 முடிந்த பிறகு கதாநாயகியின் அடுத்த சீசனை துவங்கவும் விஜய் டிவி முடிவெடுத்து இருக்கிறது.

Also Read: பிக் பாஸ் வீட்டிலும் அடித்து கொள்ள போகும் விஜய் குமாரின் குடும்பம்.. களம் இறங்கிய வனிதாவின் வாரிசு

Trending News