புதன்கிழமை, ஜனவரி 8, 2025

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகும் நபர்.. இனி கடுமையாகும் போட்டிகள்

விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி முன்னேறி வருகிறது. இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக மாற்றினார்கள்.

வார இறுதி நாளான இன்று பிக் பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. இதில் அக்ஷரா, சிபி, நிரூப், பவானி, பிரியங்கா, வருண் உள்ளிட்டோர் நாமினேஷன் பட்டியலில் உள்ளனர்.

இவர்களில் அக்ஷரா மிகவும் குறைந்த ஓட்டுகளை பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் கடுமையாக தங்கள் விளையாட்டை விளையாடி வருகின்றனர்.

அப்படிப் பார்க்கும் பொழுது அனைவரும் சிறப்பாக விளையாடினாலும் அக்ஷரா தன்னுடைய முன்கோபத்தால் பலமுறை தன்னுடைய விளையாட்டில் கவனம் செலுத்தாமல் இருந்துள்ளார். இது பார்க்கும் ரசிகர்கள் பலருக்கும் சற்று எரிச்சலை ஏற்படுத்தியது.

இதன் காரணமாகவும், மற்ற போட்டியாளர்களை விட அக்ஷரா சற்று சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கும் காரணத்தாலும் அவருக்கு குறைவான ஓட்டுகள் மட்டுமே கிடைத்துள்ளது. அக்ஷரா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் நிகழ்ச்சி நாளை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்.

அக்ஷராவை அடுத்து நிரூப் மற்றும் வருண் இருவரும் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் எலிமினேஷனில் இருந்து தப்பித்துள்ளனர். இருப்பினும் வரும் வாரங்களில் இவர்கள் இருவரும் அடுத்தடுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது.

Trending News