புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு விஜய் டிவி கொடுத்த மொத்த சம்பளம் லிஸ்ட்.. எல்லாருக்கும் லைப் டைம் செட்டில்மெண்ட்!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னராக ஆரி அறிவிக்கப்பட்டது ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இரண்டாவது வின்னராக பாலாஜி அறிவிக்கப்பட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 18 போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளம் மற்றும் எவ்வளவு நாட்கள் உள்ளே இருந்துள்ளனர் என்பதை வைத்து அவர்கள் பெற்றுள்ள மொத்த சம்பளத்தை பார்த்தால் தலை சுற்றி விடும் போல.

டைட்டில் வின்னர் ஆரிக்கு 105 நாட்களுக்கு 1,39,25,000/- பெற்றுள்ளார். இரண்டாவது வின்னராக அறிவிக்கப்பட்ட பாலாஜி 105 நாட்களுக்கு 10,50,000/- பெற்றுள்ளார்.

விஜய் டிவியின் பிரபலமான ரியோவிற்கு 105 நாட்களுக்கு 36,75,000/- பெற்றுள்ளார். ரம்யா பாண்டியன் 105 நாட்களுக்கு சம்பளமாக 78,75,000/- பெற்றுள்ளார்.

சோம் சேகர் 105 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து 10,50,000/- பெற்றுள்ளார். கேப்ரில்லா 102 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து 76,40,000/- சம்பளமாக பெற்றுள்ளார். இதில் கடைசியாக ஐந்து லட்ச ரூபாய் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

ஷிவானி கிட்டத்தட்ட 98 நாட்கள் இருந்து 58, 80, 000 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார். ஆஜித் 91 நாட்கள் இருந்து 13,65,000/- பெற்றுள்ளார். அனிதா 84 நாட்கள் இருந்து 33,60,000/- பெற்றுள்ளார். அர்ச்சனா 77 நாட்கள் இருந்து 57,75,000/- பெற்றுள்ளார். நிஷா 70 நாட்கள் இருந்து 28,00,000/- பெற்றுள்ளார்.

ஜித்தன் ரமேஷ் 69 நாட்கள் இருந்து 41,40,000/- பெற்றுள்ளார். சனம் செட்டி 63 நாட்கள் இருந்து 63,00,000/- பெற்றுள்ளார். சம்யுக்தா 56 நாட்கள் இருந்து 22,40,000/- பெற்றுள்ளார். சுசித்ரா 49 நாட்கள் இருந்து 39, 20,000/- பெற்றுள்ளார்.

சுரேஷ் சக்கரவர்த்தி 35 நாட்கள் இருந்து 3,50,000/- பெற்றுள்ளார். வேல்முருகன் 28 நாட்கள் இருந்து 14,00,000/- பெற்றுள்ளார். ரேகா 14 நாட்கள் இருந்து ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெற்று மொத்தத் தொகையாக 14,00,000/- பெற்றுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தலைமை தாங்கி நடத்தி கொடுத்த கமலஹாசன் 30 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளார். இதில் குறைந்த சம்பளமாக ஒரு நாளைக்கு பாலாஜி மற்றும் சுரேஷ் சக்கரவர்த்திக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே.

kamal-bigg-boss
kamal-bigg-boss

Trending News