வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அதல பாதாளத்திற்கு சென்ற பிக்பாஸ் டிஆர்பி.. போட்டியாளரிடம் கெஞ்சும் விஜய் டிவி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் சுவாரசியத்தை கூட்ட பிக்பாஸ் டீம் பல வித்தியாசமான டாஸ்க்குகளை கொண்டுவர இருக்கிறது.

ஆனாலும் இந்த நிகழ்ச்சியின் டிஆர்பி கடந்த சில நாட்களாகவே சரிவை சந்தித்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்த ஜிபி முத்து தான். சோசியல் மீடியா மூலம் பிரபலமான இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் பேராதரவை பெற்றார். சொல்லப்போனால் இவருக்காகவே அந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வந்தனர்.

Also read:ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டில் மொத்தமாக வாங்கிய சம்பளம்.. 14 நாட்களுக்கு இவ்வளவா?

ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். தன் குடும்பம், குழந்தைகளை விட்டு பிரிந்து இருக்க முடியாமல் ஜிபி முத்து எடுத்த இந்த முடிவு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. மேலும் அவர் பிக் பாஸ் வீட்டில் இருக்க வேண்டும் என்ற ஆதரவு குரல்களும் ஒலித்தது.

ஆனாலும் ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் தற்போது நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறைந்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் இத்தனை நாட்களாக உயரத்தில் இருந்த விஜய் டிவியின் டிஆர்பியும் தற்போது அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது.

Also read:பிக்பாஸ் வீட்டில் அத்துமீறிய போட்டியாளர்.. ரெட் கார்டு கொடுத்த கமல்

இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த விஜய் டிவி ஜிபி முத்துவை மீண்டும் நிகழ்ச்சிக்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக அழைத்து வர திட்டமிட்டு இருக்கிறது. அதன் காரணமாக தற்போது அவரிடம் பிக்பாஸ் டீம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனாலும் ஜிபி முத்து மீண்டும் வீட்டுக்குள் வருவதற்கு யோசித்து வருகிறாராம்.

இருந்தாலும் அவரை எப்படியாவது சம்மதிக்க வைத்து விட வேண்டும் என்ற நோக்கில் விஜய் டிவி அவருக்கு சம்பளத்தையும் எக்கச்சக்கமாக தருவதாக கூறியிருக்கிறது. அந்த வகையில் ஜிபி முத்து எப்போது வேண்டுமானாலும் பிக்பாஸ் வீட்டிற்கு திரும்பி வர இருக்கிறார். இந்த செய்தி அவருடைய ரசிகர்களையும், ஆர்மியினரையும் சந்தோசப்படுத்தியுள்ளது.

Also read:செருப்பை கழட்டி அடிக்க போன ஆயிஷா.. கேவலத்தின் உச்சத்திற்கு சென்ற பிக்பாஸ் வீடு

Trending News