திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மாட்டிக்கிட்டதும் ப்ளேட்டை மாத்திய நிக்சன்.. ஆண்டவரிடம் நியாயம் கேட்கும் கண்ணம்மா

Biggboss 7-Kamal: பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது சூடு பிடித்துள்ள நிலையில் நாளுக்கு நாள் ஒவ்வொரு பிரச்சனையாக கிளம்பி கொண்டிருக்கிறது. அதில் நேற்று பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு வைத்த டாஸ்க் இப்போது வீட்டிற்குள் ஒரு பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. இது இப்போது சோஷியல் மீடியாவிலும் எதிரொலித்து வருகிறது.

அதன்படி தரையில் பேசியதெல்லாம் திரையில வருது என்ற கதையாக பிக்பாஸ் புறணி பேசிய வசனங்களை எல்லாம் குறும்படமாக போட்டு காண்பித்தார். அதில் நிக்சன் வினுஷாவை பற்றி மட்ட ரகமாக கமெண்ட் அடித்தது சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனா குப்புற விழுந்தாலும் மீசையில மண்ணு ஓட்டல என அவர் அதை ஈசியாக சமாளித்தார்.

அதாவது நான் அதை ஜாலியாக தான் பேசினேன். ஆனால் அது தப்பு என்று தெரிந்து உடனே வினுஷாவிடம் நான் மன்னிப்பு கேட்டு விட்டேன் என்று கூறி பிரச்சனையை முடித்தார். ஆனால் உண்மையில் அப்படி ஒரு விஷயம் நடக்கவே இல்லை என வினுஷா தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளிப்படையாக போட்டு உடைத்துள்ளார்.

Also read: பிக்பாஸ் வீட்ல நைட்டும் தூங்க விடல, பகல்லயும் தூங்க விடல.. பெட்ல புரட்டி எடுக்கும் மன்மத குஞ்சு

அதில் அவர் கூறியிருப்பதாவது, நிக்சன் என்னை பற்றி இப்படி பேசிய விஷயமே நான் வீட்டை விட்டு வெளியில் வந்த பிறகு வீடியோ பார்த்து தான் தெரிந்து கொண்டேன். அப்படி இருக்கும் போது எப்படி அவன் என்னிடம் மன்னிப்பு கேட்டிருக்க முடியும். அது சுத்த பொய் இந்த விஷயத்தை கமல் சார் நிச்சயம் விசாரிக்க வேண்டும்.

மேலும் எனக்காக வீட்டுக்குள் வாதாடிய விசித்ரா உள்ளிட்டவர்களுக்கு என்னுடைய நன்றி. ஆனால் எனக்காக நான் நியாயம் கேட்பேன் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவு இப்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஏற்கனவே நிக்சனை கழுவி ஊற்றி வந்த ரசிகர்கள் இதை பார்த்து இன்னும் கொந்தளித்து போய் இருக்கின்றனர்.

vinusha-devi
vinusha-devi

மாட்டிக்கிட்டதும் அப்படியே பிளேட்டை மாற்றிய மிக்சனுக்கு நிச்சயம் ரெட் கார்டு கொடுக்க வேண்டும். அப்பாவி ஒருத்தரை திட்டம் போட்டு வெளியில் அனுப்பிய இவருடைய வண்டவாளம் இப்போது நிரூபணம் ஆகி இருக்கிறது. அதனால் ஆண்டவர் இந்த விஷயத்திலாவது சரியான நியாயத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இப்போது தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.

Also read: அவளா நீ.! பிக்பாஸ் வீட்ல பொண்ணுங்க உஷாரா இருங்க.. வெட்ட வெளிச்சமான மாயாவின் அந்தரங்க உறவின் ரகசியம்

Trending News