செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

சீரியலை விட படுமோசமாக டிஆர்பி ரேட்டிங்கில் தோற்றுப் போன பிக் பாஸ்.. விஜய் டிவிக்கு சூனியமாக அமைந்த விஷயங்கள்

Vijay Tv Serial: சன் டிவி சேனலுக்கு அடுத்தபடியாக விஜய் டிவி இரண்டாவது இடத்தில் இருந்தது. அதற்கு முக்கிய காரணம் ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியல்கள் தான். ஆனால் அதுவே தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அடி வாங்கிக் கொண்டே வருகிறது. சீரியலின் டிஆர்பி ரேட்டிங்கிலும் பின்னடைவை சந்தித்து இருக்கிறது. சரி பிக் பாஸ் மூலமாகவாது விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங் அதிகரிக்கும் என்று பார்த்தால் அதுவும் சீரியலை விட படுமோசமாகத்தான் இருக்கிறது.

அந்த வகையில் விஜய் டிவிக்கு சில விஷயங்கள் சூனியமாக அமைந்திருக்கிறது. அதாவது ஓரளவுக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் சிறகடிக்கும் ஆசை சீரியல், பாக்கியலட்சுமி தான். ஆனால் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த சில மாதங்களாகவே கதை எதுவும் இல்லாமல் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு வருவதால் டிஆர்பி ரேட்டிங்கில் 5.62 புள்ளிகளை பெற்றிருக்கிறது.

அதனால் எப்பொழுது இந்த நாடகத்தை முடித்துவிட்டு புது நாடகத்தை போடுவீர்கள் என்று மக்கள் வெறுப்பை கொட்டிட்டு வருகிறார்கள். ஆனால் எதையும் காதல் வாங்கிக் கொள்ளாத சேனல் தரப்பில் இருப்பவர்கள் தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். அதனால் தான் விஜய் டிவி சீரியல் என்றாலே வெறுக்கும்படி அமைந்துவிட்டது.

இது மட்டுமா சிறகடிக்கும் ஆசை சீரியல் ஒரு நேரத்தில் நல்லா போய்க் கொண்டிருந்தது. சன் டிவி சீரியலுக்கு டப் கொடுக்கும் விதமாக இருந்தது. ஆனால் ரோகிணியால் வந்த வினை என்பதற்கு ஏற்ப ரோகிணி செய்யும் பித்தலாட்டங்கள் எதுவும் வெளிவராமல் முத்து மற்றும் மீனா தொடர்ந்து அவமானங்களையும் சிக்கல்களையும் சந்தித்து வருவதால் இந்த நாடகம் டிஆர்பி ரேட்டிங்கில் 6.37 புள்ளிகளை பெற்று சன் டிவியை நெருங்க முடியாத அளவிற்கு பின்னுக்கு போயிருக்கிறது.

அடுத்ததாக இப்பொழுது கொஞ்சம் சொல்லிக்கும்படியாக ஒரு நாடகம் போய்க்கொண்டிருக்கிறது என்றால் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். குடும்ப கதையாகவும் பொறுப்பான அப்பா, கண்டிப்போடு மகன்களிடம் இருப்பதை காட்டும் விதமாக கதை இருப்பதால் இந்த நாடகத்தை ஓரளவு மக்கள் விரும்பி பார்த்து வருகிறார்கள். அதனால் 5.84 புள்ளிகளை பெற்றிருக்கிறது.

அடுத்ததாக சின்ன மருமகள் சீரியல் மற்றும் ஆகா கல்யாணம் இந்த இரண்டு சீரியலுமே மக்களின் ஃபேவரிட் சீரியலாக இருந்தாலும் தற்போது கதை சுவாரஸ்யமாக இல்லை என்பதால் 5.38 மற்றும் 5.46 புள்ளிகளைப் பெற்று இருக்கிறது.

அடுத்ததாக அனைவரும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கும் சீரியல் மகாநதி. இதற்கு முக்கிய காரணம் காவேரி மற்றும் விஜயின் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி பார்ப்பவர்களை கவர்ந்திருப்பதால் இந்த நாடகம் 4.55 புள்ளிகளை பெற்றிருக்கிறது. ஆனால் இந்த சீரியல்களை விட டிஆர்பி ரேட்டிங்கில் கம்மியான புள்ளிகளை பெற்றிருப்பது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 8. இந்த வாரம் 3.3 புள்ளிகளை பெற்றிருக்கிறது.

இதற்கு இடையில் கதையே இல்லாமல் ஓடும் பாக்கியலட்சுமி சீரியலை நிப்பாட்டி விட்டு புத்தம் புது சீரியலை கொண்டு வந்தால் விஜய் டிவி சீரியல் ஓரளவுக்கு முன்னுக்கு வந்துவிடும். அத்துடன் சிறகடிக்கும் ஆசை சீரியலில் ரோகினியின் வண்டவாளம் எல்லாம் தண்டவாளத்துக்கு ஏற்றி விட்டால் முத்து மற்றும் மீனாவின் அதிகாரம் ஓங்கும். அதன் மூலம் டிஆர்பி ரேட்டிங்கும் அதிகரித்து விடும்.

Trending News