திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

யாரும் எதிர்பார்க்காத பிக் பாஸ் வைல்ட் கார்டு என்ட்ரி.. டிஆர்பியை தக்க வைக்க மாஸ்டர் பிளான்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி கிட்டதட்ட 80 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் 9 பேர் தற்போது உள்ளனர். ஆனால் பிக் பாஸ் இறுதி கட்டத்தை நெருங்கியும் சுவாரஸ்யம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

ஆகையால் டிஆர்பியும் பெருத்த அடி வாங்கி உள்ளது. இதை தக்க வைத்துக் கொள்வதற்காக விஜய் டிவி ஒரு மாஸ்டர் பிளான் போட்டுள்ளது. அதாவது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதலாவதாக மைனா நந்தினி வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்தார். ஆனால் அதன் பின்பு யாரும் பிக் பாஸ் வீட்டுக்குள் வரவில்லை.

Also Read : கேமராவை மறந்து பைனலிஸ்ட், வின்னர் யாருனு அப்பட்டமாக கூறிய மைனா.. பதறிப்போன பிக் பாஸ்

இப்போது மீண்டும் ஒரு வைல்ட் கார்டு என்ட்ரி நுழைய உள்ளார். அதாவது கடந்த வாரம் டிஆர்பி கன்டென்ட் கொடுத்து வந்த தனலட்சுமி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இவர்தான் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் அதிக சர்ச்சையான போட்டியாளர் என்ற பெயரை வாங்கி உள்ளார்.

ஆனால் தனலட்சுமி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் எந்த ஊடகத்திற்கும் பேட்டி கொடுக்கவில்லை. அதுமட்டுமின்றி தனது சமூக வலைதள பக்கத்திலும் புகைப்படங்களை வெளியிடவில்லை. இதற்கு காரணம் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையுள்ள உள்ளார்.

Also Read : பிக் பாஸ் வீட்டில் அதிர்ச்சி.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போட்டியாளர்

ஏற்கனவே இதுபோன்று தான் பிக் பாஸில் வனிதா அதிக டிஆர்பி கொடுத்து வந்தார். ஆனால் அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு கன்டென்ட் குறை ஆரம்பித்தது. ஆகையால் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வனிதாவை என்ட்ரி கொடுக்க வைத்திருந்தனர்.

அதேபோல் தான் தனலட்சுமி தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து டிஆர்பியை ஏற்ற வருகிறார். மேலும் மீண்டும் தனலட்சுமி பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைவதற்கு அதிக சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆகையால் இன்னும் இரண்டு நாட்களில் பிக் பாஸ் வீட்டுக்குள் தனலட்சுமி என்ட்ரி கொடுப்பார்.

Also Read : ஆடியன்ஸ் மனதில் நங்கூரம் போட்டு அமர்ந்த போட்டியாளர்.. பிக் பாஸ் டைட்டில் இவருக்குத்தான்

Trending News