சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பயங்கர விபத்தில் சிக்கிய பிக் பாஸ் நடிகை.. உடன் சென்ற தோழி சம்பவ இடத்திலேயே பலி

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 19 வயதே நிரம்பிய யோசிக்காமல் யாஷிகா ஆனந்த் வயதிற்கு மீறிய கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்.

இவர் படங்களை விட விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமே மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களிலேயே யாஷிகா ஆனந்த் தான் இளம்வயது போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் யாஷிகா ஆனந்த் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் ஒரு சில புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ள யாஷிகா ஆனந்த் தற்போது எஸ்.ஜே சூர்யாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது நண்பர்களுடன் யாஷிகா ஆனந்த் காரில் பயணம் செய்துள்ளார். அப்போது மாமல்லபுரம் அருகே நடந்த விபத்தில் சாலை தடுப்பில் மோதி கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்துள்ளார்.

மேலும் யாஷிகா ஆனந்தின் தோழி வள்ளிச்செட்டி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளர். இதனையடுத்து படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது நண்பர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

car-accident-yashika
car-accident-yashika

உயிரிழந்த யாஷிகா ஆனந்தின் தோழி பவானி அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

yashika-3
yashika-3

Trending News