விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி, 90 நாட்களை கடந்து தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
மேலும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி முடிவடைய இன்னும் இரு வாரங்கள் தான் மீதி உள்ளன. இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான ரசிகர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டுதான் செல்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம் இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறையாத தன்மை தான்.
அதேபோல், வாராவாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒருவரை வெளியேற்றுவதற்காக, வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை நாமினேஷன் ப்ராசஸ் நடைபெறும். அதுமட்டுமில்லாமல், இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் தான் பிக் பாஸ் 4 வீட்டின் கடைசி நாமினேஷன்.
அந்த வகையில் இந்த வாரம் வீட்டில் உள்ள அனைவருமே நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அதாவது ரியோ, பாலா, ரம்யா, ஷிவானி, சோம் சேகர், ஆரி ஆகியோர் நாமினேஷன்னுகாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஷிவானி தான் வெளியேற்றப்படுவார் என்று இணையதளங்களில் தகவல்கள் கசிந்து வருகின்றன. அதோடு, பிக் பாஸ் சீசன் 4-ன் இறுதி நாள் நெருங்க நெருங்க போட்டிக் களம் சற்று விறுவிறுப்பாக மாறி வருகிறது.
அதேபோல், சிவானி 2 மில்லியன் ஃபேன்ஸ வெளிய வைத்திருந்தாலும், பிக்பாஸ் வீட்டிற்குள் பாலா பின்னாலேயே சுற்றி திரிந்ததாலும், சரியாக அவருடைய பெர்ஃபார்மென்ஸ் வெளிக்காட்டாததாலும் தான் இந்த வாரம் வீட்டை விட்டு போகப் போகிறார் என்றும் கூறப்படுகிறது.
எனவே, இந்த பிக் பாஸ் சீசனின் இறுதி நாமினேஷன் மூலம் ஷிவானி வெளியே போவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.