புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஸ்மால் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் கருப்பு ஆடு.. கூட இருந்தே குழி பறிக்கலாமா! சூடு பிடிக்கும் பிக்பாஸ்

Biggboss 7: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே என்று நினைக்கும் அளவுக்கு இந்த சீசன் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் படுபயங்கரமான பிளான் உடன் இருக்கின்றனர். அதிலும் வைல்ட் கார்டு என்ட்ரி வந்த பிறகு பிக்பாஸின் ஆட்டமே வேற லெவலில் மாறி இருக்கிறது. இதைத்தான் எதிர்பார்த்தோம் என ஆடியன்ஸும் தற்போது குஷியாக சோசியல் மீடியாவில் கமெண்ட் செய்து வருவதையும் நம்மால் பார்க்க முடிகிறது.

அந்த வகையில் தினேஷ், விஜே அர்ச்சனா, கானா பாலா, அன்ன பாரதி, ஆர் ஜே பிரவோ ஆகியோரை ஏனோ பழைய போட்டியாளர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதனாலயே சூனியக்காரர்கள் போல் அவர்கள் படு பயங்கரமான வேலைகளை எல்லாம் புது வரவுகளுக்கு எதிராக செய்து வருகின்றனர். அதன் முதல் படி தான் கூண்டோடு அவர்களை ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பியது.

அவர்களோடு சேர்த்து விசித்ராவையும் அனுப்பி சண்டை மூட்டி விடும் வேலையையும் அவர்கள் செய்து வருகின்றனர். இந்த உடன்படிக்கைக்கு சம்மதிக்கும் விச்சும்மா அதற்காக கேட்ட விலை தான் அவருடைய புத்திசாலித்தனம். அதாவது நான் ஸ்மால் பாஸ் வீட்டுக்குள் சென்று அவர்களை குழப்ப வேண்டும் என்றால் என்னை யாரும் நாமினேட் செய்யக்கூடாது என்பதுதான் அவருடைய கோரிக்கை.

அதை ஏற்றுக் கொண்ட பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் சொன்ன வாக்கையும் காப்பாற்றினார்கள். இப்படி ஸ்மால் பாஸ் வீட்டுக்குள் கருப்பு ஆடாக உள்ளே நுழைந்த விசித்ரா வேறு ஒரு பிளான் போட்டு அதை செயல்படுத்த இருப்பது தான் யாரும் எதிர்பாராததாக இருக்கிறது. அதாவது புது வரவுகளிடம் சண்டை போடுவது போல் காட்டிக்கொள்ளும் இவர் முன்பே தன்னுடைய பிளானை பக்காவாக அவர்களிடம் கூறிவிட்டார்.

அதாவது பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தான் எனக்கு எதிரி. ஆனால் நாமினேஷனில் வரக்கூடாது என்பதற்காக நா சண்டை போடுற மாதிரி நடிப்பேன், நீங்க எனக்கு கோ ஆபரேட் பண்ணுங்க. மத்தபடி நம்மை எல்லாம் ஒரே டீம்தான் என்று வில்லத்தனமாக கூறுகிறார். இதிலிருந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு யுக்தியை கையாளுவது தெரிகிறது.

அதில் விசித்ரா டபுள் கேம் ஆடி பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களை ஏமாற்றுகிறார். சுருக்கமாகச் சொன்னால், கூட இருந்தே குழி பறிப்பது என்பது இதுதான். நீ படித்த ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் என்ற கதையாக அவர் தனி ரூட்டில் பயணிப்பது மொத்த விளையாட்டையும் மாற்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மொத்தம் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த சீசன் வேற லெவலில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

Trending News