புதன்கிழமை, ஜனவரி 22, 2025

தடவுவது, கிள்ளுவது, கடிப்பது.. பிக்பாஸ்க்கு வந்த வேலையை மறந்து நாய்க்குட்டி போல் சுற்றும் ஜோடி

Biggboss 7: ஆரம்பம் முதலே சுவாரசியமாக நகர்ந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது இன்னும் ரணகளமாக மாறி இருக்கிறது. ஒரு பக்கம் புது வரவுகளால் ஏற்கனவே வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் தங்களுடைய கேம் ப்ளானை மாற்றி வருகின்றனர். மற்றொரு பக்கம் எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சில ஜோடிகள் பிக்னிக் வந்தது போல் சுற்றி திரிந்து கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் நிக்சன் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்தார். அதிலும் இவர் ஒரு கடுமையான போட்டியாளராக இருப்பார் என்றும் இறுதிப்போட்டி வரை செல்ல தகுதியானவர் என்றும் கூட ஆதரவுகள் எழுந்தது. ஆனால் இப்போது அவருடைய நடவடிக்கையை பார்க்கும் பொழுது எப்பொழுது வீட்டை விட்டு செல்வார் என நினைக்க தோன்றுகிறது.

அந்த அளவுக்கு அவர் வந்த வேலையை மறந்து விட்டு ஐசுவின் பின்னால் நாய் குட்டி போல் சுற்றிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே இவர்கள் இருவரும் எல்லை மீறி பேசிக் கொள்வதும், நெருக்கம் காட்டுவதும் சோசியல் மீடியாவில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஸ்மால் பாஸ் வீட்டிலிருந்து பிக்பாஸ் வீட்டுக்கு வந்துள்ள நிக்சன் ஓவர் அட்டூழியம் செய்து வருகிறார்.

அதிலும் தற்போது வெளியாகியிருக்கும் ஒரு வீடியோவில் அவர் ஐசுவின் அருகில் உட்கார்ந்து கொண்டு அவரை உதடு நல்லா இருக்கு, மூக்கு நல்லா இருக்கு என வர்ணிப்பது முகம் சுளிக்க வைத்துள்ளது. முன்னதாக இந்த ஜோடி எங்கேயாவது ஓரமாக உட்கார்ந்து கொண்டு கதை அளந்து கொண்டிருப்பார்கள். ஆனால் இப்போது ஒரு படி மேலே போய் தொட்டு பேசுவது வரை சென்று இருக்கின்றனர்.

இப்படித்தான் முந்தைய சீசனில் போட்டியாளராக இருந்த அசல் கோலார் சக பெண் போட்டியாளர்களிடம் ஓவராக நெருக்கம் காட்டி வந்தார். அதிலும் பெண்களைப் பார்த்தாலே போதும் அவர்களை தடவுவது, கிள்ளுவது, கடிப்பது என ஓவர் அட்ராசிட்டி செய்து வந்தார். இது கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த இடத்தை நிக்சன் பிடித்திருக்கிறார்.

மேலும் மாறுவேடத்தில் வந்திருக்கும் அசல் கோளாறு என நிக்சன் கலாய்க்கப்பட்டு வரும் நிலையில் இதை நிச்சயம் கமல் கண்டிக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்து வருகிறது. அந்த வகையில் பிக்பாஸ் வீட்டை லவ்வர்ஸ் பார்க் போல் மாற்றி அலும்பு செய்து வரும் இவர்களின் சேட்டைக்கு ஒரு எல்லையே கிடையாதா என ஆடியன்ஸ் கதறி வருகின்றனர்.

Trending News