வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வா வா ப்ரோமோ பொறுக்கி.. யாரு பெருசுன்னு அடிச்சு காட்டு, பத்த வச்சு குளிர் காயும் பிக்பாஸ்

Biggboss 7: இன்று காலையில் இப்படி ஒரு ப்ரோமோ வரும் என பிக்பாஸ் ஆடியன்ஸ் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு அது மரண மாஸாக இருந்தது. ஆனால் அதையே ஓவர் டேக் செய்யும் அளவுக்கு அடுத்த ப்ரோமோ வெறித்தனமாக வந்துள்ளது.

இதிலும் தினேஷ், விஷ்ணு சண்டை தொடர்கிறது. ஆனால் இந்த முறை பிக் பாஸ் வீடு ரத்த களரி ஆகும் அளவுக்கு சம்பவம் நங்கூரம் போல் நடந்துள்ளது. தனக்கு கொடுக்கப்பட்ட சீக்ரெட் டாஸ்கை கச்சிதமாக செய்யும் தினேஷ் இதன் மூலம் போட்டியாளர்களை மிரள வைத்துள்ளார்.

அந்த வகையில் அவர் விஷ்ணுவை வா வா ப்ரோமோ பொறுக்கி என்று சொல்லி தூண்டி விடுகிறார். ஏற்கனவே உச்சகட்ட கோபத்தில் இருந்த அவர் இந்த வார்த்தையை கேட்டு ஆக்ரோஷமாகிறார். அதை தொடர்ந்து பேச்சுவார்த்தை முற்றி கைகலப்பாகும் நிலைக்கு செல்கிறது.

Also read: மூளை இல்லாத முட்டா பீசு.. பலியாடை தீனி போட்டு வளர்க்கும் பிக்பாஸ் மாயா

அதிலும் வீடியோவின் இறுதியில் தினேஷ் நான் சிரிச்சுகிட்டே பேசமாட்டேன் என சொல்வது வேற லெவல் ஆக உள்ளது. மேலும் இவ்வளவு ரணகளம் நடக்கும் நேரத்திலும் அர்ச்சனா தான் அதை தடுப்பதற்கு முன் வருகிறார். மாயா வழக்கம்போல் ஆர்வமாக அதை வேடிக்கை பார்க்கிறார்.

இப்படியாக வெளிவந்துள்ள இந்த ப்ரோமோ இன்று இரவு எபிசோட் பார்க்கும் ஆவலை அதிகரித்துள்ளது. சும்மாவே சலங்கை கட்டி ஆடும் விஷ்ணு இப்போது ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறார். ஆனால் இதெல்லாம் பிக்பாஸுக்கு பத்தாது.

அதனாலேயே விஜய் டிவியின் டிஆர்பியை ஏற்ற புது பிரச்சனையை அவர் கொளுத்தி போட்டு இருக்கிறார். இதனால் பற்றி எரியும் வீட்டில் அவர் நன்றாக குளிர்காயவும் செய்கிறார். அந்த வகையில் இந்த வார டாஸ்க் அனைத்தும் இதைவிட இன்னும் ரணகளமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: என்னது நரியா, ஹே அமுல் பேபி.. விஷ்ணுவை திருப்பி அடிக்கும் கர்மா, கோர்த்து விட்ட பிக்பாஸ்

Trending News