ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

தனியாக உட்கார்ந்து கடலை போடவா ஷோக்கு வந்தீங்க.? ரெக்கை புடுங்கப்பட்ட பிக் பாஸ் காதல் பறவைகள்

Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சண்டை, சச்சரவு ஒரு பக்கம் இருந்தாலும் லவ் ட்ராக் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கும். ஒவ்வொரு சீசனிலும் இப்படி ஏதாவது ஒரு காதல் அலப்பறை இருந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படித்தான் இந்த ஏழாவது சீசனிலும் ஒரு காதல் ஜோடி இருக்கின்றனர்.

இதில் சிறு வித்தியாசம் என்னவென்றால் வெளியிலேயே இவர்கள் காதலர்கள் என கிசு கிசுக்கப்பட்டவர்கள் தான். அந்த வகையில் பிக் பாஸ் வீட்டுக்கு எதற்கு வந்தோம் என தெரியாமல் சுற்றிக் கொண்டிருக்கும் மணி, ரவீனா இன்று ரோஸ்ட் செய்யப்பட்டிருக்கின்றனர்.

Also read: 5 பேர் செஞ்ச கிரிமினல் வேலை.. பிரதீப் விஷயத்தில் நடந்த உண்மையை சொன்ன கூல் சுரேஷ்

அந்த ப்ரோமோ தான் தற்போது வெளியாகி உள்ளது. இது எதிர்பார்த்தது தான் என்றாலும் மணியை உட்கார வைத்து கிளாஸ் எடுத்த சம்பவம் நிச்சயம் எதிர்பாராதது. அதன்படி இன்று ரவீனாவை பார்க்க வந்த அவருடைய குடும்ப உறவுகள் அவரை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டனர்.

அம்மா ஒத்துக்கிட்டாங்கன்னு எல்லார்கிட்டயும் சொல்லி இருக்க. யாருக்காகவும் நீ இங்க விளையாட வரல. உன்னோட வேலைய மட்டும் பாரு என ரவீனாவின் ஆன்ட்டி கடும் கொந்தளிப்பில் பேசுகிறார். இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழிக்கும் ரவீனா மணியிடம் சைகையில் நடந்ததை சொல்கிறார்.

Also read: கப்பு முக்கியம் பிகிலு.. பிக்பாஸ் அர்ச்சனாவுக்கு நாசுக்காக ஹிண்ட் கொடுத்த உடன்பிறப்பு

அதைத்தொடர்ந்து மணியும் ரொம்ப கோவப்பட்டாங்கன்னா கால்ல விழுந்துட வேண்டியது தான் என விஷ்ணுவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். பின் ரவீனாவின் ஆன்ட்டி இருவரையும் உட்கார வைத்து பேசுகிறார். அதில் இரண்டு பேரும் தனியாக உட்கார்ந்து கடலை போடவா இந்த ஷோக்கு வந்தீங்க.

இனிமே அவளை கூப்பிட்டு வச்சு தனியா பேசாதீங்க என மணியின் முகத்தில் அடித்தது போல் பேசி விட்டார். இதைக் கேட்டு அவர் வெளிப்படையாகவே அதிர்ந்து விட்டார். அந்த ப்ரோமோ தற்போது வைரலாகி இன்றைய எபிசோடுக்கான ஆர்வத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Trending News