வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது இவர்தான்.. தொட முடியாத உயரத்தில் அர்ச்சனா, ஓட்டிங் லிஸ்ட்

Biggboss 7 Voting: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நிக்சன், ரவீனா இருவரும் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறினார்கள். அதைத்தொடர்ந்து இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் விஷ்ணுவை தவிர அனைவருமே நாமினேட் செய்யப்பட்டு இருக்கின்றனர்.

அது மட்டுமல்லாமல் பணப்பெட்டியும் வைக்கப்பட்டு இருக்கிறது. அதை யார் தட்டி தூக்கப் போகிறார்கள் என்ற பரபரப்பு ஒரு பக்கம் இருக்கிறது. ஆனால் விசித்ரா அதை கைப்பற்றி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சூழலில் தற்போதைய ஓட்டிங் நிலவரமும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

Also read: என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கிறியே.. மாயாவின் வண்டவாளத்தை எடுத்து விட்ட விஷ்ணு

அந்த வகையில் வழக்கம் போல அர்ச்சனா தான் 41% வாக்குகளை பெற்று முன்னணியில் இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக மணி, தினேஷ் ஆகியோர் இருக்கின்றனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் உள்ளது.

எப்போதுமே முதல் ஆளாக கெத்துக் காட்டும் விசித்ரா இப்போது நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதற்கு முக்கிய காரணம் தினேஷ் மீது அவர் கக்கும் முழு வன்மம் தான். கடந்த வாரம் விசித்ரா தினேஷின் பர்சனல் விஷயங்களை பேசி கடும் வெறுப்புக்கு ஆளானார்.

Also read: பூர்ணிமாவுக்கும் எனக்கும் நடுவுல ஒன்னும் இல்ல.. முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த விஷ்ணு

அதனாலேயே இப்போது மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறார். இவருக்கு அடுத்ததாக விஜய் வர்மா, மாயா, பூர்ணிமா இருக்கின்றனர். இதன்படி பார்த்தால் இந்த வாரம் பூர்ணிமா வீட்டை விட்டு வெளியேற வேண்டும். ஆனால் வழக்கம் போல ஏதாவது தில்லாலங்கடி வேலை செய்யும் விஜய் டிவி விஜய் வர்மாவை துரத்தி விடவும் வாய்ப்பு இருக்கிறது.

bb7-voting
bb7-voting

Trending News