ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

ஓட்டு பிசிறு தட்ட கூடாது, களமிறங்கிய ஆர்மி.. பிக்பாஸ் 8 டைட்டில் யாருக்கு.?

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்திற்கு வந்திருக்கிறது. இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்து அவர்களை உற்சாகமூட்டி சென்றுள்ளனர்.

அதை அடுத்து வரப்போகும் டாஸ்க்குகள் கடுமையாக இருக்கும். அதற்காக போட்டியாளர்கள் தயாராகி வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க சோசியல் மீடியாவில் சில போட்டியாளர்களின் ஆதரவாளர்கள் ஓட்டு வேட்டையை தொடங்கிவிட்டனர். அதில் சௌந்தர்யாவின் பி ஆர் ஆரம்பத்திலிருந்து இந்த வேலையை செய்து வருகின்றனர்.

அதை அடுத்து இப்போது முத்துக்குமரனின் ஆர்மி களத்தில் இறங்கியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் கடுமையான போட்டியாளராக இருக்கும் இவர்தான் டைட்டிலை தட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் 8 டைட்டில் யாருக்கு.?

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு இரண்டு பேர் வெளியேற இருக்கின்றனர். அதை அடுத்து டாப் 10 போட்டியாளர்கள் தங்களுக்குள் மோத இருக்கின்றனர்.

இதில் இந்த சீசன் வெற்றியாளர் யார் என்பதை பிக்பாஸ் டீம் ஏற்கனவே முடிவு செய்து விட்டதாக தெரிகிறது. அதன்படி முத்துக்குமரனுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

இருப்பினும் ஓட்டு சிந்தாமல் சிதறாமல் வரவேண்டும் என ஆர்மி மக்கள் வேலையை தொடங்கியுள்ளனர். அதன்படி தற்போது சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் இருக்கும் முத்து டைட்டிலை வெல்வாரா என்பதை பார்ப்போம்.

Trending News