Biggboss 8 Voting: இந்த சீசன் பிக்பாஸை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். முதல் இரண்டு வாரங்கள் சுவாரஸ்யமாக நகர்ந்த நிலையில் அடுத்தடுத்த நாட்களில் நிகழ்ச்சி கொஞ்சம் டல் அடித்தது.
ஆனால் இந்த வாரம் ஆரம்பத்திலேயே சண்டையும் சச்சரவுமாக சூடு பிடித்திருக்கிறது. அதேபோல் முதல் வாரத்தில் இருந்து முத்துக்குமரன் ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறார்.
அதனால் தானோ என்னவோ மற்ற போட்டியாளர்களுக்கு இவரை பிடிக்கவில்லை. அதிலும் அருண் ஏதாவது சொல்லி இவரை மட்டம் தட்டுவதில் தான் குறியாக இருக்கிறார். இப்படி இருக்கும் சூழலில் கடந்த வாரம் முத்து போன சீசனில் அர்ச்சனா எப்படி ஜெயித்தார் என மறைமுகமாக கேள்வி எழுப்பினார்.
முத்துக்கு அதிகரிக்கும் ஆதரவு
இதனால் கடுப்பான அருண் பயங்கரமாக ரியாக்ட் செய்தார். அதேபோல் அர்ச்சனா சோசியல் மீடியாவில் முத்துவை கலாய்க்கும் பதிவுகளை ஸ்டோரியாக போட்டு தன் கோபத்தை காட்டினார். ஆனால் இது முத்துவுக்கு சாதகமாக மாறி உள்ளது.
அதன்படி இந்த வார ஓட்டிங் நிலவரத்தில் முத்து அதிகபட்ச வாக்குகளை கைப்பற்றியுள்ளார். அதாவது தற்போது வரை அவருக்கு 95,183 வாக்குகள் கிடைத்து இருக்கிறது. இது கடந்த சீசனில் அர்ச்சனா வாங்கியதை விட அதிகம் தான்.
ஏழாவது சீசனில் அர்ச்சனா 90 ஆயிரம் வரை வாக்குகளை பெற்றிருந்தார். இதற்கு முக்கிய காரணம் மாயா அணியை அவர் கதறவிட்டது தான். அதைத்தான் முத்து போன சீசனில் பேசி தான் ஜெயித்தார்கள் என குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால் அர்ச்சனா அதற்கு எதிர்வினை ஆற்றியதில் தற்போது வாக்குகள் முத்துவுக்கு சரசரவென குவிய ஆரம்பித்துள்ளது. எப்போதும் அதிகப்படியாக ஓட்டு வாங்கும் சௌந்தர்யாவுக்கு கூட 50,000 ஓட்டுகள் தான் கிடைத்துள்ளது.
இதிலிருந்து முத்துவுக்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறது என தெரிகிறது. ஏற்கனவே இவர் நிச்சயம் இறுதிவரை செல்வார் என்ற கணிப்பு இருந்தது. அதை இந்த வாரம் ஓட்டிங் நிலவரம் உறுதிப்படுத்தி இருக்கிறது.