வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

கடைசி நேரத்தில் பிக்பாஸ் வைத்த ட்விஸ்ட்.. எதிர்பாராததை எதிர்பார்க்க வைக்கும் எலிமினேஷன்

Biggboss 8: பிக்பாஸ் 8 நிகழ்ச்சி 3 வாரங்களை கடந்துள்ளது. இதில் முதல் வாரம் ரவீந்தர் வெளியேற்றப்பட்டார். அதை அடுத்து கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் ஓவர் ஹீரோயிசம் காட்டி வந்த அர்னவ் சில அவமானங்களுடன் வெளியேறினார்.

அப்போது நடந்த சில சம்பவங்களில் விஜய் சேதுபதியும் சர்ச்சைக்கு ஆளானார். அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் எந்த பீஸ் வெளியேறப் போகிறார் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதில் டேஞ்சர் இடத்தில் பவித்ரா, தர்ஷாகுப்தா, அன்சிதா ஆகியோர் இருந்தனர். ஆனால் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் மூலம் பவித்ரா கிரேட் எஸ்கேப் ஆகிவிட்டார். இதனால் தர்ஷா அல்லது அன்சிதா வெளியேற வாய்ப்பு இருக்கிறது.

இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறப் போவது யாரு.?

ஆனால் தற்போது கிடைத்திருக்கும் தகவலின் படி இந்த வாரம் பிக் பாஸ் ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார். அதன்படி இந்த வாரம் வீட்டை விட்டு யாரும் வெளியேறப் போவது கிடையாது. தீபாவளி போனஸ் போல் எலிமினேஷன் கிடையாது என விஜய் சேதுபதி அறிவிக்க போகிறார்.

பண்டிகை கால சலுகையாக போட்டியாளர்களுக்கு இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அடுத்த வாரம் இரண்டு பேர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வரும் வாரம் ஆட்டம் கொஞ்சம் சூடு பிடிக்கும் என தெரிகிறது.

இந்த வாரமே சில மிக்சர் போட்டியாளர்கள் ஆட்டத்தை ஆட ஆரம்பித்து விட்டனர். டாஸ்க்குகளும் அதற்கேற்றார் போல் வர தொடங்கி இருக்கிறது. இதனால் ஹவுஸ் மேட்ஸ் புது யுக்தியை கையாளவும் ஆரம்பித்து விடுவார்கள். ஆக மொத்தம் எதிர்பாராததை எதிர்பார்க்க வைத்திருக்கிறது இந்த வாரம்.

Trending News