வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

மொத்த வீட்டுக்கும் எதிராளியாக மாறிப்போன ரவீந்தர்.. விஜய் சேதுபதியின் தீர்ப்பு என்ன.? பிக் பாஸ் 8

Biggboss 8: கடந்த சில நாட்களாக ஜவ்வு போல் இருந்த பிக்பாஸ் இன்று சூடு பிடிக்கும் போல் தெரிகிறது. அப்படியாக தான் தற்போது ஒரு ப்ரோமோ வெளிவந்து சபாஷ் சரியான போட்டி என சொல்ல வைத்திருக்கிறது.

இன்றைய டாஸ்க்கில் பிக் பாஸ் வீட்டில் யார் ஒரிஜினலாக இருக்கிறார்கள் யார் போலி வேஷம் போடுகிறார்கள் என சொல்ல சொன்னார். அதன்படி ரஞ்சித் ரவீந்தருக்கு தான் அதிக ஓட்டு கிடைத்தது.

இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில் இதுதான் காட்டப்பட்டது. அதை அடுத்து தொடர்ச்சியாக வந்த மூன்றாவது ப்ரோமோவில் இந்த விவகாரம் சண்டையாக மாறிப் போயிருக்கிறது.

அதில் ரஞ்சித் நாமினேஷனில் இருக்கும் மூன்று பேர் எனக்காக தான் இதை செய்தோம் என்று சொன்னால் அது எமோஷன் என சொல்கிறார். மற்றொரு பக்கம் விஷால் ரவீந்தர் ஆடிய பிராங்க் கேமை எதிர்த்து கேள்வி கேட்கிறார்.

ரவீந்தருக்கு எதிராக மாறிய வீடு

ஏற்கனவே இந்த பிரச்சனையால் டேமேஜ் ஆன ரவீந்தர் நான் ஆடியது கேம் கிடையாது. இந்த வீட்டில் தர்ஷாவும் தர்ஷிகாவும் ஆடியது தான் கேம் என சம்பந்தமில்லாமல் பெண்களை கோர்த்து விடுகிறார்.

சும்மாவே சாமி ஆடுபவர்கள் இப்போது சும்மாவா விடுவார்கள். எப்படி எங்களை சொல்லலாம் என கையை நீட்டி இருவரும் கொந்தளிக்க ஆரம்பித்து விட்டனர். அதை அடுத்து ரஞ்சித் எதற்காக என்னுடைய பெயரை பயன்படுத்தினீர்கள் என ரவீந்தரை கேள்வி கேட்டு வாயடைக்க வைக்கிறார்.

இப்படியாக வெளிவந்துள்ள ப்ரோமோ ஃபயராக இருக்கிறது. ஆனால் எபிசோடில் இது நமத்து போகாமல் இருந்தால் சரிதான். மேலும் பிராங்க் என்ற ஒரு விஷயத்தால் இப்போது மொத்த வீடும் ரவிந்தருக்கு எதிராக மாறி நிற்கிறது. இதில் விஜய் சேதுபதியின் தீர்ப்பு என்ன என்பதை நாளை பார்ப்போம்.

Trending News