Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வாரம் முழுவதும் பரபரப்பாக இருந்தது. டிக்கெட் டு பினாலே டாஸ்க் பரபரப்பை விட யார் எலிமினேஷன் என்பது தான் பெரும் விவாதமாக இருந்தது.
அதில் ஓட்டு நிலவரப்படி கடைசி மூன்று இடங்களில் பவித்ரா ஜாக்லின் மஞ்சரி ஆகியோர் இருந்தனர். அதனால் மஞ்சரி இன்று வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
அதேபோல் நாளை ஜாக்லின் என சோசியல் மீடியா செய்திகள் பரவியது. ஆனால் கடைசி நேரத்தில் பிக்பாஸ் அடித்த பல்டி யாரும் எதிர்பார்க்காதது.
அதன்படி இன்று சனிக்கிழமை எபிசோடில் ராணவ் வெளியேற்றப்பட்டுள்ளார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் ஆரம்பத்திலிருந்து இருக்கின்றனர்.
கடைசி நேரத்தில் பிக்பாஸ் அடித்த பல்டி
அதேபோல் இவருக்கு சப்போர்ட் செய்து முத்துவை திட்ட நெட்டிசன்களும் உண்டு. அதிலும் இந்த வாரம் முழுவதும் ராணவ் ஆதரவாளர்கள் ஓட்டு வேட்டை நடத்தினர்.
ஆனால் அந்த ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணா போய்விட்டது. தற்போது ராணவ் வெளியேறி இருக்கும் நிலையில் நாளைய எபிசோடில் மஞ்சரி வெளியேறுகிறார்.
அதை அடுத்து மீதமுள்ள எட்டு போட்டியாளர்கள் ஆட்டத்தை தொடர்வார்கள். அதில் அடுத்த வாரம் பணப்பெட்டி வைக்கப்படும்.
அது யார் கைக்கு மாறும் என்பதையும் டீம் தான் முடிவு செய்யப் போகிறது. அதன்படி விஷால் அந்த பெட்டியை எடுக்கவும் வாய்ப்பு உள்ளது.
இப்படியாக டாப் 5 இறுதிப் போட்டியாளர்களை விஜய் டிவி தற்போது முடிவு செய்துவிட்டது. அதில் யார் டைட்டிலுக்கு உரியவர்கள் என்பதை பார்ப்போம்.