புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஹீரோயிசம் காட்டுறேன்னு அசிங்கப்பட்ட அர்ணவ்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியவருக்கு கிடைத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

Arnav Salary-Biggboss 8: கடந்த வாரம் பிக்பாஸ் நாமினேஷனில் 10 போட்டியாளர்கள் சிக்கினார்கள். இதில் அர்ணவ் குறைந்த ஓட்டுக்களை பெற்று நேற்று நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். ஆனால் போகும்போது கூட அவர் தன் வன்மத்தை கக்கி விட்டு தான் சென்றார்.

இதுதான் இப்போது சோஷியல் மீடியாவில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. அதிலும் கடும் கோபத்தோடு அந்த டிராபியை போட்டு உடைத்தது வெளியில் வந்த பிறகு பெண்கள் அணியை புகழ்ந்தது ஆண்களை தரக்குறைவாக பேசியது என அனைத்துமே முகம் சுளிக்க வைத்தது.

ஒரு மனிதன் இந்த அளவுக்கு அநாகரிகமாக நடந்து கொள்ள முடியுமா என்றும் பார்ப்பவர்களுக்கு தோன்றியது. அப்படித்தான் நேற்று அவர் தன் மனதில் இருக்கும் கோபத்தை மட்டும் அல்லாமல் இதுதான் என் குணம் என்பதையும் வெளிப்படையாக மக்களுக்கு காட்டிவிட்டு சென்றார்.

அர்ணவ் வாங்கிய மொத்த சம்பளம்

ஆனால் போனவர் நல்ல பெயரோடு செல்லவில்லை அசிங்கப்பட்டு அவமானப்பட்டு தான் சென்றார். இது தேவையா குமாரு என்பதுதான் அங்கிருந்த பார்வையாளர்களின் மைண்ட் வாய்ஸ் ஆக இருக்கும். அந்த அளவுக்கு விஜய் சேதுபதி அவருக்கு பதிலடி கொடுத்து தான் அனுப்பி விட்டார்.

இப்படி முகம் கருத்து போய் வெளியேறிய அர்ணவ் வாங்கிய சம்பளம் பற்றி இங்கு காண்போம். ஓரளவுக்கு தெரிந்த பிரபலமாக இருக்கும் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒரு நாளைக்கு 20 முதல் 25 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டிருக்கிறது.

அதன்படி பார்த்தால் அவர் பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 14 நாட்கள் இருந்துள்ளார். அந்த கணக்கீட்டின்படி அவருடைய சம்பளம் 3லிருந்து 3.5 லட்சம் ஆக உள்ளது. இதன் பிறகாவது அவர் தன்னுடைய தவறை திருப்பி கொண்டால் வைல்ட் கார்டில் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

Trending News