Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது பரபரப்பாக மாறி இருக்கிறது. கடந்த வாரம் TTF டாஸ்க் வெறித்தனமாக நடைபெற்றது. அதில் ரயான் முதல் இறுதிப் போட்டியாளராக மாறியுள்ளார்.
இந்த சீசனின் கடைசி போட்டியாளராக வந்து இப்போது முதல் பைனலிஸ்டாக இவர் மாறி இருப்பது பாராட்டுகளை பெற்று வருகிறது. அதை அடுத்து ராணவ், மஞ்சரி ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.
அதை அடுத்து மீதமுள்ள 8 நபர்களில் ஏழு பேர் இந்த வாரம் நாமினேஷனில் இருக்கின்றனர். இதில் இந்த வாரம் எந்த இரண்டு பேர் வெளியேறுவார்கள் என்ற சுவாரஸ்யம் அனைவருக்கும் இருக்கிறது.
இந்த சூழலில் இன்று பிக்பாஸ் கொடுத்துள்ள டாஸ்க் சௌந்தர்யாவை மொத்தமாக முடித்து விட தான் என்பது போல் இருக்கிறது. யாருக்கு பி ஆர் டி இருக்கிறது என நினைக்கிறீர்கள்.
சௌந்தர்யாவின் தில்லாலங்கடி வேலை
அதை காரணத்தோடு சொல்ல வேண்டும் என பிக் பாஸ் சொல்கிறார். அதன்படி அனைவரும் சௌந்தர்யாவை தான் கூறுகிறார்கள்.
ஏனென்றால் இந்த நிகழ்ச்சியில் எதுவுமே செய்யாமல் இதனை வாரம் வந்த பெருமை இவரையே சேரும். அதுவும் வார இறுதியில் இவர் பெயரை கேட்டாலே ஆடியன்ஸ் பலமாக கைதட்டுவார்கள்.
இதிலிருந்து உள்ளே இருப்பவர்களுக்கு பிஆர் டீம் எந்த அளவுக்கு வேலை பார்க்கிறது என தெரிந்திருக்கும். அதை அப்படியே தற்போது புட்டு புட்டு வைத்துள்ளனர்.
இதனால் சௌந்தர்யா கார்டன் ஏரியாவில் அழுது புலம்பியபடி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் அப்படியே பி ஆர் வெச்சிருந்தா தான் என்னவாம். இங்க யாரும் இந்த வேலைய பார்க்காத மாதிரி பேசுறாங்க என கூறுகிறார்.
இதை பிஆர் டீம் நிச்சயம் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். மொத்தமாக மாட்டிக்கிட்டோம் பங்கு, நீயே சோலிய முடிச்சு விட்டுருவ போல என்பது போன்ற கமெண்டுகள் இப்போது பரவி வருகின்றன.
அதன்படி இந்த வாரம் சௌந்தர்யா வெளியேறுவாரா அல்லது பி ஆர் டீம் உதவியுடன் இறுதிவரை இருப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.