வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

அவ்வளவுதான் முடிச்சு விட்டீங்க போங்க.. சவுண்டை கதறவிட்ட பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ்

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பித்து ஆறு வாரங்கள் முடிந்து விட்டது. இதில் நேற்று வைல்டு கார்டு போட்டியாளராக வந்த ரியா குறைந்த வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.

இரண்டு வாரங்களிலேயே இவருடைய பயணம் முடிந்த நிலையில் கண்ணீருடன் அவர் சென்றது பரிதாபமாக இருந்தது. விஜய் சேதுபதி கூட அவர் கண் கலங்கியதை பார்த்து சாரி என சொல்லியிருந்தார்.

அதை அடுத்து இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேறப் போகிறார் என்ற ஆவல் அனைவருக்கும் இருக்கிறது. அதில் வீட்டில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் ஆடியன்ஸ் கூட சௌந்தர்யாவை துரத்தி விடுங்கள் என போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

பெயரைக் கெடுத்துக் கொண்ட சௌந்தர்யா

இவருக்கு சோசியல் மீடியாவில் பயங்கர ஆதரவு இருக்கிறது. எல்லாமே இவருடைய பி ஆர் டீம் வேலை தான். ஆனால் வார இறுதியில் விஜய் சேதுபதி இவரை டோட்டல் டேமேஜ் ஆகிவிட்டார். அது மட்டும் இன்றி போட்டியாளர்களும் சௌந்தர்யாவின் குணத்தை புட்டு புட்டு வைத்தனர்.

திமிருடன் நடந்து கொள்வது, அடுத்தவர் பேசும் போது பாதியிலேயே கட் செய்வது என கொஞ்சம் அடாவடியாகத்தான் இவர் இருக்கிறார். அதை விஜய் சேதுபதி முன்பு போட்டியாளர்கள் கூறியிருந்தனர். இதை பார்த்த சௌந்தர்யா தனியாக குமுறி குமுறி அழுதார்.

அதை அடுத்து இன்றைய நாமினேஷனில் சௌந்தர்யா வசமாக சிக்கி இருக்கிறார். மனதில் உள்ள அனைத்து ஆதங்கத்தையும் இதில் ஹவுஸ் மேட்ஸ் வெளிப்படுத்தி இருக்கின்றனர். ஏற்கனவே சவுண்டு இமேஜ் டேமேஜ் ஆகி இருக்கிறது.

அதில் நாமினேஷனும் அவருக்கு எதிராக திரும்பி உள்ளது. இதுவரை வாக்கு எண்ணிக்கையில் இவர்தான் முதலிடத்தில் இருந்தார். ஆனால் தற்போது பார்வையாளர்கள் இவர் மீது அதிருப்தியில் இருப்பதால் இந்த வாரம் எந்த நிலைக்கு செல்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News