Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஆள்மாறாட்டம் டாஸ்க் நடைபெறுகிறது. அதில் போட்டியாளர்கள் மற்றவர்களை போல் இமிடேட் செய்ய வேண்டும். அதிலும் அவர்களுடைய எந்த குணத்தை மக்களுக்கு காட்ட வேண்டும் என முடிவு செய்து நடிக்க வேண்டும்.
இதெல்லாம் போட்டியாளர்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. அடுத்தவரை போட்டுக் கொடுப்பதில்தான் ஒரு கிக் இருக்கிறது. அதனாலயே ஹவுஸ் மேட்ஸ் ஜாலியாக இந்த டாஸ்க்கை செய்ய தயாராகிவிட்டனர்.
ஆனால் சில வன்மத்தை இறக்கும் களமாகவும் இதை பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்து விட்டனர் போட்டியாளர்கள். அதன்படி தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சௌந்தர்யா சுனிதாவைப் போல் நடித்துக் காட்டுகிறார்.
சுனிதாவை வம்புக்கு இழுத்த சௌந்தர்யா
அதில் அவர் ஜாக்லின் போல் மாறிய அன்சிதாவிடம் சண்டை போடுகிறார். நான் இந்த நிகழ்ச்சிக்காக எந்த எஃபெக்ட்டும் போடலைன்னு எப்படி சொல்லலாம் என சுனிதா ஆவேசமாக பேசுவது போல் சௌந்தர்யா நடித்துக் காட்டினார்.
மேலும் நான் இந்த பேர வாங்குறதுக்காக இங்க வரல என ஒரு அழுகாட்சி டிராமாவும் நடக்கிறது. சௌந்தர்யாவின் இந்த ஓவர் பர்பாமன்சை பார்த்த சுனிதா முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது.
அடிப்பாவி மனசுல வச்சிருந்த வன்மத்தை எல்லாம் இப்படி கக்கிட்டியே என அவர் நினைப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இதனால் பெண்கள் அணியில் இந்த வார முடிவுக்குள் பெரும் போர்க்களம் நடக்கும் என்பது இப்போதே தெரிய ஆரம்பித்துவிட்டது.
ஏற்கனவே சௌந்தர்யாவுக்கும் சுனிதாவுக்கும் இடையே ஒரு வாய்க்கா தவறாறு ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் சவுண்டு வம்படியாக போய் வம்பு இழுத்திருக்கிறார். எங்க போய் முடிய போகுதோ. ஆனா இவர்களோட சண்டை தானே நமக்கு என்டர்டெயின்மென்ட்.