Biggboss 8: பிக்பாஸ் சீசன் 8 நேற்று ஆரவாரமாக ஆரம்பித்திருக்கிறது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் மொத்தமாக 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். அதில் சில பெயர்கள் நாம் ஏற்கனவே யூகித்தது தான்.
அதன்படி தீபக், ரவீந்தர், ரஞ்சித், அர்னவ், அருண், சத்யா, விஜே விஷால், முத்துக்குமரன், ஜெஃப்ரி என 9 ஆண்கள் கலந்து கொண்டுள்ளனர். அதேபோல் பெண்களை பொருத்தவரையில் சாச்சனா, தர்ஷிகா, பவித்ரா ஜனனி, அன்ஷிகா, ஆர் ஜே ஆனந்தி, தர்ஷா குப்தா, சௌந்தர்யா, சுனிதா என 9 பேர் இருக்கின்றனர்.
இவர்களில் யார் இறுதிவரை பயணிப்பார்கள் என்ற கருத்துக்கணிப்பும் இப்போது எழுந்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்கட்டும் பிக்பாஸ் வீடு என்றாலே குழாயடி சண்டை தானே. அதற்காகவே சில போட்டியாளர்கள் தயாராகி வந்திருக்கின்றனர்.
பிக் பாஸ் வீட்டுக்குள் ஆரம்பித்த ஏழரை
அதிலும் முதல் நாளான நேற்று நடந்த ஒரு சம்பவம் நிச்சயம் போகப்போக பெரும் பிரச்சனையாக மாறும் என தெரிகிறது. அதாவது நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சௌந்தர்யாவின் குரல் கொஞ்சம் கரடு முரடாக இருக்கிறது. இதனாலேயே அவர் ஏகப்பட்ட கேலியும் கிண்டலையும் எதிர்கொண்டுள்ளார்.
அதன்படி அவர் வீட்டுக்குள் வந்ததுமே சாச்சனா உங்களுக்கு சளி பிடித்திருக்கிறதா என கேட்டார். ஆனால் சௌந்தர்யா என் குரலே இப்படித்தான் என்றதும் அவர் பதறிப் போய் மன்னிப்பு கேட்டார். ஆனால் மற்றொரு போட்டியாளரான தர்ஷிகா அவருடைய குரலை கிண்டல் செய்தது தற்போது பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
உன் வாய்ஸ் பொம்பள புள்ள மாதிரி இல்ல பெண்மையா பேசு என இஷ்டத்திற்கு கலாய்த்தார். இதனால் முதல் நாளிலேயே சௌந்தர்யாவிற்கு ஆதரவும் தர்ஷிகாவிற்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. அதே சமயம் இந்த வாரம் எலிமினேட் செய்ய வேண்டிய ஆள் இவர்தான் என ஆடியன்ஸ் குறி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷன் இவரா.?
- ஆண்டவர் இடத்தை நிரப்புவாரா VJS, எதிர்பார்ப்பை கிளப்பிய பிக்பாஸ் 8
- விஜய் சேதுபதி நல்லுள்ளத்துக்கு வந்த சங்கடம்
- கோலாகலமாக தொடங்க உள்ள பிக் பாஸ் சீசன் 8