Biggboss 8: இந்த வாரம் பிக்பாஸ் நாமினேஷனில் 12 போட்டியாளர்கள் சிக்கி இருக்கின்றனர. அதில் வழக்கம் போல முத்துக்குமரனுக்கு இந்த வாரமும் அதிக ஓட்டுகள் கிடைத்து இருக்கிறது. ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு அவர் ஒரு லட்சம் வாக்குகளை நெருங்கி இருப்பது ஆச்சரியம் தான்.
அதே சமயம் வீட்டுக்குள் இருப்பவர்களில் ஆடியன்சை கடுப்பேற்றும் ஒருவராக சௌந்தர்யா இருக்கிறார். ஆரம்பத்திலிருந்து இவருடைய நடவடிக்கைகள் அப்படித்தான் இருக்கிறது. ஆனாலும் பி ஆர் டீம் உதவியால் இவர் அதிக ஓட்டுக்களை பெற்று வந்தார்.
ஆனால் இந்த முறை முத்துவை விட மிகக் குறைவான ஓட்டுகள் தான் இவருக்கு கிடைத்திருக்கிறது. அதேபோல் நேற்று நடந்த கலவரத்தில் ஒரு போட்டியாளர் தற்போது ஓட்டு எண்ணிக்கையில் முன்னேறி வந்துள்ளார்.
பிக் பாஸ் தற்போதைய ஓட்டு நிலவரம்
அதாவது நேற்று பவித்ராவை மஞ்சரி டெவிலாக இருந்து படாத பாடு படுத்தினார். ஆனால் தேவதை பொறுமையாக இருக்க வேண்டும் என்பதை பவித்ரா கடைப்பிடித்தது ரசிகர்களை இம்ப்ரஸ் செய்து விட்டது.
அதைத்தொடர்ந்து அவருக்கான வாக்குகளும் கணிதமாக உயரத் தொடங்கியது. இந்த வார தொடக்கத்தில் கடைசி நான்கு இடத்தில் இருந்த பவித்ரா தற்போது முதல் ஆறு இடத்தில் இருக்கிறார்.
அந்த வகையில் பவித்ராவுக்கு தற்போது வரை 3 4,806 வாக்குகள் கிடைத்திருக்கிறது. நாளைய தினத்தில் இது இன்னும் உயரும் என்றே தெரிகிறது. அதன்படி தற்போது கிடைத்திருக்கும் ஆதரவை பவித்ரா அப்படியே பிடித்துக் கொண்டால் நிச்சயம் டாப் 5 இடத்தை பிடிப்பார்.
மேலும் ஓட்டு நிலவரத்தில் தற்போது சாச்சனா தான் கடைசி இடத்தில் இருக்கிறார். கடந்த வாரம் இதே நிலை இருந்தபோது சிவகுமார் அதற்கு பலியானார். அதுபோல் இந்த வாரமும் இவர் தப்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.