Biggboss 8 Voting: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி கட்டம் வந்துவிட்டது. அதனால் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் கடுமையாக மோதி வருகின்றனர்.
அதில் இந்த வாரம் TTF டாஸ்க் அனல் பறக்க நடந்தது. எப்படியாவது இந்த டிக்கெட்டை அடித்து விட வேண்டும் என அனைவரும் கடும் முயற்சி செய்தனர்.
அதில் ரயான் இப்போது வெற்றி பெற்றுள்ளார். 21 பாய்ண்டுகளை பெற்று முன்னிலையில் இருக்கும் இவர்தான் இந்த சீசன் முதல் பைனல் போட்டியாளர்.
தலைகீழாக மாறிய ஓட்டிங் ரிப்போர்ட்
இதனால் எலிமினேஷனில் ஒரு மாற்றம் நடந்துள்ளது. அதாவது இந்த வாரத் தொடக்கத்தில் குறைந்த ஓட்டுகளை பெற்றது ரயான் தான். ஆனால் அவருடைய கடும் முயற்சி வாக்குகளை அள்ளி குவித்துள்ளது.
அதன்படி தற்போது அவர் வாக்கு எண்ணிக்கையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதல் இடத்தில் வழக்கம்போல் தீபக் உள்ளார்.
இவர்களுக்கு அடுத்ததாக ராணவ், விஷால், ஜாக்லின் ஆகியோர் உள்ளனர். இதில் கடைசி மூன்று இடங்களை அருண், பவித்ரா, மஞ்சரி ஆகியோர் பிடித்துள்ளனர்.
இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் என்றால் பவித்ரா, மஞ்சரி ஆகியோர் வெளியேறுவது உறுதி. இதில் பவித்ராவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
அதனால் இந்த வாரம் அவர் வெளியேற்றப்பட்டால் நிச்சயம் சோசியல் மீடியாவில் ஒரு ரணகளம் நடக்கும். ஒருவேளை விஜய் டிவி இறுதி நேர ட்விஸ்ட் வைத்து அருண் அல்லது விஷாலை வெளியேற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.