புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நாரதர் வேலையை பார்த்த பிக்பாஸ்.. எதிரும் புதிருமாக நிற்கும் அர்னவ், அன்ஷிதா

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஏகப்பட்ட டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டது. அதில் அறிவு திறமை டீம் ஒர்க் ஆகியவை அடிப்படையில் நடந்த போட்டியில் பெண்கள் அணி வென்றது. அதே போல் இரு அணிகளும் டிவி சேனல்கள் வைத்திருப்பது போல் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இன்று அதன் முடிவில் ஒவ்வொருவருக்கும் அவார்ட் கொடுக்க வேண்டும் என பிக்பாஸ் சொல்கிறார். அதன்படி மூன்றாவது ப்ரோமோவில் முத்துக்குமரனுக்கு டம்மி பாவா, தர்ஷாவுக்கு டிராமா குயின் என அனைவருக்கும் ஒரு பட்டப்பெயர் வழங்கப்பட்டது.

இதில் அன்சிதாவுக்கு சொம்பு தூக்கி என்ற விருது கொடுத்தனர். அதை கொடுத்தது யார் என்றால் அவருடைய ரீல் ஹீரோவான அர்னவ் தான். இவர்கள் இருவரும் நிஜத்தில் காதலர்கள் என்ற செய்தி பல காலமாகவே இருக்கிறது.

அவ்வளவு ஏன் அர்னவ் தன் மனைவியை பிரிந்ததற்கு கூட அன்சிதா தான் காரணம் என சொல்லப்படுகிறது. இந்த சூழலில் அவர் கையாலேயே இப்படி ஒரு விருதை வாங்கியது அன்சிதாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

காதலர்களுக்கு இடையே மூட்டிவிட்ட பிக் பாஸ்

தற்போது வெளியாகி இருக்கும் நான்காவது ப்ரோமோவில் அவர் அந்த வருத்தத்தை காட்டுகிறார். வேற யார் இதை கொடுத்திருந்தாலும் நான் கவலை பட்டிருக்க மாட்டேன். ஆனால் நீ கொடுத்ததை என்னால் ஏத்துக்க முடியாது.

நிஜ வாழ்க்கையில் கூட நான் யாருக்கும் சொம்பு தூக்கியது கிடையாது என கண்ணீர் விடுகிறார். அவரை அர்னவ், எல்லோரும் சேர்ந்து முடிவு செய்யும் போது என்ன செய்ய முடியும் என சமாதானப்படுத்துகிறார்.

இப்படியாக இந்த காதல் பறவைகளுக்கு இடையே நாரதர் வேலையை பார்த்துள்ளார் பிக் பாஸ். இதைப் பார்க்கும்போது ஸ்கிரிப்ட் என பச்சையாக தெரிகிறது. ஆனாலும் இந்த அளவுக்கு இவர்கள் நடிக்க வேண்டாம் என பார்வையாளர்கள் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

Trending News