வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

இப்பதான் மனசுல இருக்க பாரமே குறைஞ்சிருக்கு.. சாச்சனாவை வெளுத்து விட்ட VJS, விசில் பறந்த பிக்பாஸ் மேடை

Biggboss 8: இந்த வார இறுதி பிக்பாஸ் எபிசோடை காண ஆடியன்ஸ் ரொம்பவும் ஆர்வமாக காத்திருந்தனர். ஏனென்றால் இந்த வாரம் விசாரிப்பதற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறது. அதிலும் டாடியின் லிட்டில் பிரின்சஸ் ரேஞ்சுக்கு அளப்பறை செய்த சாச்சனா தான் ஏகப்பட்ட புகாரில் சிக்கி இருக்கிறார்.

விஜய் சேதுபதியிடம் அளவுக்கு அதிகமாக உரிமை எடுத்துக் கொள்கிறார் என்ற கருத்து ஆரம்பத்தில் இருந்து இருக்கிறது. அதற்கேற்றார் போல் மக்கள் செல்வனும் ரீல் மகளை ஒன்றும் சொல்வது கிடையாது.

ஆனால் எதற்கெடுத்தாலும் அழுது சண்டை போடுவது, சாப்பாட்டு விஷயத்தில் பிரச்சனை செய்வது என சாச்சனா அதிகப்படியாக தான் இருக்கிறார். அதிலும் இந்த வாரம் ஜெஃப்ரியிடம் அவர் காட்டிய வன்மம் கண்டிக்கத்தக்கது.

ரீல் மகளை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி

நிச்சயம் இது பற்றி விஜய் சேதுபதி கேட்க வேண்டும் என எதிர்ப்பு குரல்கள் எழுந்தது. அதை அடுத்து தற்போது வெளிவந்திருக்கும் புரோமோவில் சாச்சனாவை அவர் லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார்.

மத்தவங்க உன் தப்ப சொன்னா நீ கேட்டு இருப்பியா, அதிகாரம் கையில வரும்போது அத பயன்படுத்துறதுல தான் நம்ம யாருன்னு தெரியும் என நன்றாக ரோஸ்ட் செய்து விட்டார். இதனால் லிட்டில் பிரின்சஸ் முகமே வாடிவிட்டது.

அழுகைக்கு தயாராக நின்றவரை பார்த்து ஆடியன்ஸ்க்கு கொள்ளை சந்தோஷம். ஸ்பைடர் படத்தில் வரும் எஸ் ஜே சூர்யா போல் விசில் அடித்து சந்தோஷத்தை வெளிப்படுத்தி விட்டனர். அந்த ப்ரோமோ தற்போது வெளிவந்துள்ள நிலையில் எபிசோடை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

Trending News