Cook With Comali: விஜய் டிவியில் கடந்த 105 நாட்களாக பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் 8 நல்லபடியாக முடிந்துவிட்டது. அனைவரும் எதிர்பார்த்தது போல் முத்துக்குமரன் டைட்டிலை வென்றுள்ளார்.
அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் ரன்னராக வந்த சௌந்தர்யாவும் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.
அதேபோல் டாப் போட்டியாளர்களாக இருந்தவர்களும் மீடியா சேனல்களுக்கு பேட்டி கொடுப்பதில் பிஸியாக இருக்கின்றனர். அதில் தீபக் ரொம்ப பிசியாக இருக்கிறார்.
தொகுப்பாளர் நடிகர் என்பதை தாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜென்டில்மேன் என்ற பெயரையும் அவர் பெற்றுள்ளார். அவருக்கு முன்பை விட இப்போது அதிக ரசிகர்கள் குவிந்துள்ளனர்.
அப்புறம் என்ன குக் வித் கோமாளி தான்
அவருடைய ஆட்டம் நேர்மையாக இருந்த நிலையில் அவருடைய எவிக்ஷன் பலரையும் சோகமாக்கியது. இப்படி அனைவரின் அன்பிற்கு காரணமான தீபக் அடுத்த களத்தில் குதிக்க தயாராகிவிட்டார்.
தற்போது அவர் அளித்த ஒரு பேட்டியில் குக் வித் கோமாளி சீசனில் பங்கேற்பீர்களா? என கேள்வி கேட்கப்பட்டது. உடனே தீபக் அதையும் ஒரு கை பார்த்துடலாம்.
பிக் பாஸ் வீட்ல சமைச்சிருக்கேன். ஆனா பெருசா பண்ண முடியுமா தெரியாது. இருந்தாலும் குக் வித் கோமாளியில் இறங்கி ஆடலாம் என தன் சம்மதத்தை தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த நிலையில் விஜய் டிவி டிஆர்பிக்காக குக் வித் கோமாளியை விரைவில் தொடங்க இருக்கிறது. தீபக் தற்போது கிரீன் சிக்னல் காட்டிய நிலையில் விஜய் டிவி அவரை போட்டியாளராக தட்டித் தூக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.