வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சௌந்தர்யாவின் ஆணவத்தை அடக்கிய ஏஞ்சல்.. இந்த வாரம் பிக்பாஸ் பாயாசம் யாருக்கு.? ஓட்டிங் ரிப்போர்ட்

Biggboss 8: நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சாச்சனா, ஆனந்தி இருவரும் வெளியேறினர். அதை அடுத்து இந்த வாரம் யாரை கட்டம் கட்டி தூக்கலாம் என ஆடியன்ஸ் தீர்மானித்துவிட்டனர்.

அது ஓட்டு நிலவரத்தில் அப்பட்டமாக தெரிகிறது. அதன்படி இந்த வாரம் 9 பேர் நாமினேஷனில் சிக்கி இருக்கின்றனர்.

வித்தியாசமாக பட்டை பெயர் வைத்து நாமினேஷன் நடைபெற்றது. அதில் இந்த வாரம் முத்துக்குமரன் நாமினேட் செய்யப்படவில்லை என்பது ஆச்சரியமான செய்தி தான்.

அதனால் சௌந்தர்யாவுக்கு அதிக ஓட்டு கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் யானை தன் தலையில் மண்ணை வாரி போடும் கதையாக ஆகிவிட்டது அவரின் நிலை.

கடந்த வாரம் விஜய் சேதுபதி கோவா அணியை முடிந்த அளவு ரோஸ்ட் செய்து விட்டார். இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது சௌந்தர்யா தான்.

அவர் வீட்டுக்குள் செய்யும் கேவலமான வேலையை விஜய் சேதுபதி போட்டு உடைத்தார். அதனால் அவருடைய இமேஜ் ரொம்பவே டேமேஜ் ஆகிவிட்டது.

அது வாக்கு எண்ணிக்கையிலும் தெரிகிறது. கடந்த வாரம் ரசிகர்களின் மனதை கவர்ந்த பவித்ரா தற்போது அதிக ஓட்டுக்களை பெற்று முதலிடத்தில் இருக்கிறார்.

biggboss8-voting
biggboss8-voting

பிக் பாஸ் ஓட்டு நிலவரம்

அதன்படி முதல் நாளான இன்று அவர் 13,054 ஓட்டுகளை பெற்றுள்ளார். அதற்கு அடுத்தபடியாக சௌந்தர்யா 12992 வாக்குகளை பெற்றுள்ளார்.

அதேபோல் அடுத்த இடத்தில் இருக்கும் ஜாக்லினுக்கு வெறும் 6918 ஓட்டுகள் தான் கிடைத்துள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் அன்சிதா விஷால் ரயான் ஆகியோர் உள்ளனர்.

அதற்கு அடுத்ததாக சத்யா அருண் இருக்கின்றனர். இதில் கடைசி இடம் வீட்டுக்குள் லவ் கன்டென்ட் கொடுத்து கொண்டு இருக்கும் தர்ஷிகா தான்.

அவருக்கு 3245 ஓட்டுகள் தான் கிடைத்துள்ளது. ஏற்கனவே இவருக்கு தான் இந்த வாரம் பாயாசம் போட வேண்டும் என்பது ஆடியன்ஸின் பிளான்.

அது தற்போது நடக்க தொடங்கி விட்டது. அதனால் இந்த வாரம் இந்த ஜோடி புறாக்கள் பிரியப்போவது உறுதி.

Trending News