திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பெட்ரூமில் வைத்து கிஸ் அடித்த அமீர்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் போட்டியாளர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள அனைத்துப் போட்டிகளிலும் புது வேகத்துடன் செயல்படுகின்றனர்.

இது ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு புறம் அழகான ஒரு காதல் லீலை அரங்கேறி வருகிறது. பிக்பாஸ் வீட்டுக்கு வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் உள்ளே வந்தவர் அமீர். ஆரம்பத்தில் ஒன்றும் தெரியாத பிள்ளை போல் இருந்த அமீர் தற்போது தன்னுடைய குறும்புத்தனங்களை காட்டி வருகிறார்.

அதில் ஒன்று அவர் பவானியிடம் செய்யும் காதல் லீலை. இதற்கு பவானி தொடர்ந்து ஆட்சேபம் தெரிவித்து வருகிறார். இருந்தாலும் அமீர் விடாமுயற்சியாக பவானியை சுற்றி சுற்றி வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு கூட அமீர் தன் காதலை பவானியிடம் வெளிப்படையாகச் சொன்னார். ஆனால் அதை மறுத்த பவானி உன்னைவிட எனக்கு வயது அதிகம் என்று கூறினார். ஆனாலும் அமீர் தன் நிலையில் உறுதியாக இருப்பது போல் பேசினார். இதற்கு பிரியங்காவும் பாராட்டு தெரிவித்தார்.

இந்நிலையில் பவானி மற்றும் அமீர் இருவரும் படுக்கை அறையில் பேசிக் கொள்ளும் பிக் பாஸ் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் பவானி, அமீர் இருவரும் அருகருகே இருக்கும் பெட்டில் அமர்ந்திருக்கின்றனர்.

அப்பொழுது பவானியிடம் ஏதோ சொல்ல வரும் அமீர் அவர் காதில் ஏதோ சொல்வது போல் சென்று படக்கென்று கிஸ் அடித்து விட்டார். ஆனால் அதற்கு பவானி எந்த ஒரு எதிர்ப்பும் காட்டாமல் சிரித்துக் கொண்டே இருந்தார்.

பவானி வெளிப்படையாக அமீரை எதிர்த்தாலும் அவர் உள்ளுக்குள் அதை ரசிக்கிறார் என்பது அவர் முகத்தில் நன்றாகவே தெரிகிறது. சத்தமில்லாமல் அரங்கேறி வரும் இந்த காதல் நீடிக்குமா அல்லது கவின், லாஸ்லியா காதல் போன்று பிக்பாஸ் வீட்டை விட்டு சென்றதும் முடிவுக்கு வருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News