ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நல்ல தொகுப்பாளர் என்ற பெயருடன் வலம் வந்தார் அர்ச்சனா. பேசாமல் அங்கேயே இருந்திருந்தால் தலை தப்பித்திருக்கும். ஆனால் வான்டட்டாக விஜய் டிவிக்கு சென்று வாங்கி கட்டிக் கொண்டிருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோதே அர்ச்சனாவுக்கு ஏகப்பட்ட நெகடிவ் விமர்சனங்கள் கிடைத்தன. அதை எல்லாம் புரிந்து கொண்டு சும்மா இருந்திருக்கலாம். அதை விட்டுவிட்டு யூடியூப் சேனல் தொடங்கிய அதில் வீடியோ போட்டுக் கொண்டிருந்தார்.
அதிலும் ஆரம்பத்தில் நல்ல முறையாகத்தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் எந்த நேரத்தில் பாத்ரூம் டூர்(bathroom tour) என்ற ஒன்றை அறிமுகப்படுத்தினாரோ அதோடு முடிந்தது அவரது சோலி.
சின்ன யூடியூப் சேனல் முதல் பெரிய யூடியூப் சேனல் வரை மொத்தமும் வச்சு செஞ்சு விட்டார்கள். போதாக்குறைக்கு தரக்குறைவான விமர்சனங்களும் அர்ச்சனா மீது வைக்கப்பட்டது.
அர்ச்சனாவுக்கு சமூகவலைதளத்தில் பெரிய அளவு நெகட்டிவ் இமேஜ் இருந்தாலும் திடீரென அவருக்கு உடல்நிலை குன்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது அனைத்து ரசிகர்களுக்கும் சோகத்தை கொடுத்துள்ளது.
அர்ச்சனாவுக்கு மண்டையோட்டில் மூளைக்கு அருகில் சின்னதாக ஒரு கட்டி உள்ளதாம். அதை உடனடியாக எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதால் விடியற்காலையில் அவசர அவசரமாக அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இன்னும் ஓரிரு வாரங்களில் முழுமையாக குணமடைந்து விடுவார் என கூறுகின்றனர்.