வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

தே*** மு***ன்னு திட்டுறாங்க.. கண்ணீர் விட்டு கதறும் பிக்பாஸ் அர்ச்சனா

இருக்கிறதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டால் பிரச்சனைதான் என்ற பழமொழிக்கு ஏற்ற படி ஒழுங்காக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த அர்ச்சனா பணம் கிடைக்கிறது என பிக்பாஸ் வீட்டிற்கு போனதிலிருந்து தான் அவருக்கு பிரச்சனையே வந்தது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றும் போது ரசிகர்களிடம் நல்ல பெயர் எடுத்து வைத்திருந்த அர்ச்சனா விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய சுயரூபத்தை வெளிக்காட்டி ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்றார்.

அன்பு ஜெயிக்கும் என்று நம்புறியா? என்ற வசனத்தை ட்ரோல் செய்யாதவர்களே கிடையாது. அன்புக்கு அப்புறம் அடுத்ததாக அர்ச்சனா நெட்டிசன்களிடம் வசமாக சிக்கியது சமீபத்தில் தன்னுடைய யூடியூப் சேனலுக்கு தன் வீட்டு பாத்ரூமை வீடியோ எடுத்து போட்டதில்தான்.

வீடியோ போட்டாலும் போட்டார் நண்டு சிண்டு என அனைவருமே யூடியூப் வலைதளங்களில் வச்சு பயங்கரமாக கிண்டல் செய்து விட்டனர். அர்ச்சனாவை தொடர்ந்து அவரது மகளும் பயங்கரமாக கிண்டல் செய்யப் பட்டு வருகிறார். தன்னை கிண்டல் செய்தவர்கள் வீடியோக்களை எல்லாம் காபிரைட் கிளைம் செய்து மேலும் பிரச்சினையை தூண்டி விட்டுவிட்டார் அர்ச்சனா.

இது இப்போது அடங்கிய பாடில்லை. நாளுக்கு நாள் அர்ச்சனா வைத்திருக்கும் சமூக வலைதள பக்கங்களில் அசிங்க அசிங்கமாக கமெண்ட்டுகள், அர்ச்சனா பற்றிய வீடியோக்கள் என பரபரப்பாகி வருகிறார். அவரும் பெண் தானே.

ஒரு கட்டம் வரை திமிராக பேசிக்கொண்டிருந்த அர்ச்சனா தற்போது நெட்டிசன்களிடம் சரணடைந்து விட்டார் என்பதே உண்மை. தற்போது தயவு செய்து யாரும் அசிங்கமாக பேச வேண்டாம் எனவும், அளவுக்கதிகமாக கிண்டல் செய்ய வேண்டாம் எனவும் கோரிக்கை வைத்து வருகிறார்.

vj-archana-cinemapettai
vj-archana-cinemapettai

Trending News