Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி ஆரம்பத்தில் கொண்டாடப்பட்டார். ஆனால் இப்போது அவர் சில விமர்சனங்களை சந்தித்து வருகிறார். இதற்கு முக்கிய காரணம் அவர் போட்டியாளர்களை ஃப்ரண்ட்லியாக ஹேண்டில் செய்வது தான்.
ஆனால் இவர்களுக்கு ஹீரோ செட்டாகாது வில்லன் வேஷம்தான் செட் ஆகும் என அவர் தற்போது புரிந்து கொண்டிருப்பார். அதாவது கடந்த வாரம் விஷால், தர்ஷிகா, அன்சிதா, சாச்சனா, அருண் உட்பட இன்னும் சிலர் சேர்ந்து யாருக்கும் தெரியாமல் பிரியாணி செய்து திருட்டுத்தனமாக சாப்பிட்டார்கள்.
இதுபோல் மூன்று முறை நடந்திருக்கிறது. அதை நேற்றைய நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி கண்டித்தார். ஆனால் அவர் யார் மனதும் நோகாதவாறு பேசினார். இனிமேல் போட்டியாளர்கள் அதை செய்ய மாட்டார்கள் என நினைத்து சாதாரணமாக கடந்து சென்று விட்டார்.
விஜய் சேதுபதி 2.0 எப்போது.?
ஆனால் நீ என்ன சொல்வது நாங்க என்ன கேட்பது என அந்த கும்பல் மீண்டும் ஃபிரைட் ரைஸ் செய்து சாப்பிடுவதற்கு திட்டம் போடுகின்றனர். லைவில் இதை பார்த்த ஆடியன்ஸ் பட்டும் திருந்தாத கூட்டம் இது. விஜய் சேதுபதி இவர்களை இன்னும் கடுமையாக திட்டி இருக்க வேண்டும்.
அவர் சிரித்துக் கொண்டே பேசியதால்தான் இந்தக் கூட்டம் அவர் வார்த்தையை மதிக்கவில்லை. அதனால் ஹீரோ விஜய் சேதுபதி வேண்டாம் விக்ரம் பட சந்தானம் போல் வில்லத்தனம் தான் இங்கு எடுப்படும் என கூறி வருகின்றனர்.
அதனால் இந்த வாரம் விஜய் சேதுபதியின் இன்னொரு முகத்தை நாம் காணலாம். ஒவ்வொரு வாரமும் சோசியல் மீடியாவில் வரும் கருத்துக்களை அவர் உன்னிப்பாக கவனித்து வருகிறார். அதனால் இந்த வார இறுதி நிச்சயம் சுவாரசியமாக இருக்கும்.