சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ஒரு போஸ்ட்டுக்கு 150 ஆ.? தீயா வேலை செய்யும் பி.ஆர் டீம், மாட்டிக்கிட்ட பிக்பாஸ் உத்தமன்

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சீசனில் இருந்தே கடும் சர்ச்சையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. கமல் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியதில் தொடங்கி மாயா கூட்டணி செய்த அட்டூழியங்களை தட்டிக் கேட்காதது வரை எல்லாமே சர்ச்சை தான்.

அதனாலேயே இந்த சீசனில் விஜய் சேதுபதி தொகுப்பாளராக உள்ளே வந்தார். ஆனால் இப்போதும் பெரும் பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கிறது. அவர் நடுநிலையாக நடந்து கொள்ளவில்லை ஒரு சார்பாக பேசுகிறார் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளது.

அதேபோல் மக்கள் விரும்பாத போட்டியாளரை அவர் எதுவுமே சொல்வதில்லை என்ற கருத்தும் இருக்கிறது. உண்மையில் தயாரிப்பு தரப்பு சொல்வதை தான் ஹோஸ்ட் கேட்க வேண்டும். அந்த நிலையில் தான் விஜய் சேதுபதி அடக்கி வாசிக்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்க பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் அம்பி போல் இருந்த அருண் இப்போது அந்நியனாக மாறிவிட்டார். இதுதான் உண்மை குணம். அதுவும் முதுவை மட்டம் தட்டுவது என்றால் இவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி.

வசமாக மாட்டிக் கொண்ட அருண்

அப்படித்தான் டபக்கு டப்பா என கிண்டல் அடித்தார். அதில் தொடங்கி அவர் பேசும் ஒவ்வொன்றும் எரிச்சலை தான் கிளப்புகிறது. அதேபோல் அவருடைய நடவடிக்கைகளும் பார்ப்பதற்கு அவ்வளவு ஏற்புடையதாக இல்லை.

இதனால் அவரை சோசியல் மீடியாவில் பார்வையாளர்கள் ரோஸ்ட் செய்து வருகின்றனர். இருப்பினும் அவருக்கு ஒரு பக்கம் ஆதரவான கன்டென்டுகளும் வருகிறது. அது எப்படி என தற்போது தெரியவந்துள்ளது.

அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே போட்டியாளர்கள் பி ஆர் டீம் ஒன்றை உருவாக்கிவிட்டு தான் வருகின்றனர். அப்படித்தான் அருண் பற்றி பாசிட்டிவ் போஸ்ட் போட்டால் ஒரு பதிவுக்கு 150 ரூபாய் என பேரம் பேசப்பட்டிருக்கிறது.

அந்த ஸ்கிரீன் ஷாட் இப்போது வைரலாகி வருகிறது. இதை பார்த்த ஆடியன்ஸ் நிச்சயம் இது அர்ச்சனாவுடைய வேலையாக தான் இருக்கும். போன சீசனில் அவருக்கு சப்போர்ட் செய்ததை நினைத்தால் அவமானமாக இருக்கிறது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆக மொத்தம் பிக் பாஸ் உத்தமன் நன்றாக மாட்டிக் கொண்டார்.

Trending News