வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

எனக்கு வந்தா ரத்தம் உங்களுக்கெல்லாம் தக்காளி சட்னி.. பிக்பாஸ் வீட்டில் தாமரையின் அலப்பறைகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ளதால் போட்டியாளர்கள் ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர். நாள்தோறும் சண்டை,வாக்குவாதங்கள் என்று பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

எங்கே சண்டை முற்றிப்போய் அடிதடியில் இறங்கி விடுவார்களோ என்று நினைக்கும் அளவுக்கு ஒருவருக்கொருவர் ஆக்ரோஷமாக சண்டை போட்டு வருகின்றனர். இந்த வாரம் பிக்பாஸ் வீடு அரசியல் கட்சியாக மாறியுள்ளது.

தங்கள் கட்சி ஜெயிக்க வேண்டும் என்பதற்காக போட்டியாளர்கள் அனைவரும் முழு மூச்சுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தங்கள் கட்சியின் கொடியை நிலைநாட்டுவதற்காக போராடி வருகின்றனர்.

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தங்கள் கொடியை நடுவதற்காக பரபரப்பாக விளையாடிக் கொண்டிருந்தனர் அப்போது அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதற்கு பார்த்த தாமரை அதற்கு ஆட்சேபம் தெரிவித்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த பிரியங்கா மற்றும் குழுவினருடன் தாமரை வம்படியாக சண்டைக்கு சென்றார். தாமரை இதற்கு முன்பு அண்ணாச்சி உடன் மோதல் ஏற்பட்ட பொழுது அமைதியாக சென்றார். ஆனால் ப்ரியங்கா ஒரு சின்ன வார்த்தை கூறினால் கூட அதை பெரிசாக்கி வம்பிழுத்து வருகிறார்.

தாமரையின் இந்த செயல்பாடுகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தாமரைக்கு எதிராக பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். உங்களுக்கு வந்தா ரத்தம் அதே பிரியங்காவுக்கு வந்தா தக்காளி சட்னியா என்று கேள்வி கேட்கின்றனர்.

மேலும் பிக் பாஸ் வீட்டில் தாமரை எரிச்சலூட்டும் முகமாக இருக்கிறார் என்றும் சின்ன விஷயத்தை கூட ஊதி பெரிதாக்கி விடுகிறார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தனக்கு பிடித்தவர்கள் என்றால் சத்தமில்லாமல் நகர்ந்து விடும் தாமரை பிரியங்காவுடன் மட்டும் தொடர்ந்து சண்டையிட்டு வருவது பிரியங்காவின் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

Trending News