செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பிரதீப்பை வைத்து காய் நகர்த்திய டம்மி மம்மி.. ராஜதந்திரத்தை போட்டு கொடுத்த ஓட்ட வாய் நாராயணன்

Biggboss 7-Pradeep: பிரதீப் பிக்பாஸ் வீட்டில் இருந்த போதும் சரி அவர் வீட்டை விட்டு சென்றபோதும் சரி அவர்தான் நிகழ்ச்சிக்கு கன்டென்ட் கொடுத்து வருகிறார். அவரை வைத்தே சிலர் காய் நகர்த்தி ரசிகர்களின் ஆதரவை பெறும் தந்திரத்தையும் செய்து வருகின்றனர்.

அதை நம்பி வாக்களித்த ஆடியன்ஸ் இப்போது அதிர்ந்து போகும் அளவுக்கு பல உண்மைகள் வெட்ட வெளிச்சமாகி வருகிறது. அதன்படி பிரதீப்பை வைத்து தனக்கான ஓட்டுகளை பெற்ற விசித்ராவின் முகமூடியை விஷ்ணு இப்போது கிழித்தெறிந்துள்ளார்.

சமீபகாலமாகவே விசித்ரா ஓட்டுக்காக செய்யும் வேலைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. முதலில் அர்ச்சனாவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு அவர் அடித்த லூட்டி வைரலானது. அதன் பிறகு இருவரும் எதிர் எதிராக மாறிப்போன கதையையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

Also read: சூனிய கிழவியின் ஆட்டத்தை புட்டு புட்டு வைத்த அர்ச்சனா.. அரண்டு போன போட்டியாளர்கள்

இந்த சூழலில் நேற்று விஷ்ணு, விசித்ரா இடையே ஒரு வாக்குவாதம் நடந்தது. அதில் விச்சு நீ கேப்டன் ஆனது மத்தவங்க மண்டைய கழுவி தான். என்கிட்ட கூட வந்து என்னை நாமினேட் பண்ணாதீங்கன்னு கெஞ்சின தான என கேட்டார்.

உடனே கடுப்பான விஷ்ணு நீங்களும் பிரதீப் இருக்கும்போது அவருக்கு எதிராக பேச சொல்லி என்னை தூண்டி விட்டீங்க. அது ஞாபகம் இருக்கா என தன்னை நோக்கி வந்த அம்பை விச்சு பக்கமே திருப்பி விட்டார். இயல்பாகவே விஷ்ணு ஒருவரை பற்றி பொதுவெளியில் போட்டுக் கொடுப்பதில் கில்லாடி.

அது தெரிந்தும் விசித்ரா வாயை கொடுத்து மாட்டிக்கொண்டார். தற்போது இந்த வீடியோவை பார்த்த பிக்பாஸ் ஆடியன்ஸ் விச்சுவின் உண்மை முகம் வெளிவருவதாக கூறி வருகின்றனர். ஆக மொத்தம் வனிதாவிலிருந்து விசித்ரா, அர்ச்சனா வரை எல்லோரும் பிரதீப்பைதான் கன்டென்ட் ஆக பயன்படுத்தி வருகின்றனர்.

Also read: மூஞ்ச பாரு, கருமம் சொருகிடுவேன்.. உச்ச கட்ட ஆக்ரோஷத்தில் பிக்பாஸ் வீடு, ரெட் கார்டு யாருக்கு.?

Trending News