செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

உனக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு தக்காளி சட்னியா.? மஞ்சரியை ரவுண்டு கட்டிய பிக்பாஸ் டெவில் கூட்டம்

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது டெவில் ஏஞ்சல் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் நேற்றைய எபிசோட் வேற லெவலில் அனல் பறந்தது. டெவில் கூட்டம் மொத்தமாக சேர்த்து தேவதைகளை பழி தீர்த்துக் கொண்டனர்.

அதிலும் மஞ்சரி ஒரிஜினல் சாத்தானாக மாறி செய்த ஒவ்வொன்றும் பார்ப்பவர்களுக்கே பகீர் என்று இருந்தது. இது சைக்கலாஜிக்கல் கேம் என்றாலும் தனிப்பட்ட வன்மத்தையும் போட்டியாளர்கள் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதில் பவித்ராவை மஞ்சரி படுத்திய பாடு கொஞ்சம் நஞ்சம் கிடையாது. இருந்தாலும் ஒரு தேவதையாக அவர் பொறுமையாக இருந்ததும் பாராட்டப்பட்டு வருகிறது. இப்படி நேற்று சுவாரஸ்யமாக முடிந்த நிலையில் இன்று டீம் மாறிவிட்டது.

மஞ்சரியை ரவுண்டு கட்டிய பிக்பாஸ் டெவில் கூட்டம்

டெவில் கூட்டம் தேவதையாகவும் தேவதைகள் டெவில் ஆகவும் இன்று மாறிவிட்டனர். அதில் காலையில் இருந்தே டெவில் அணியினர் முடிந்த அளவு நேற்று பட்ட கஷ்டத்திற்கு இன்று மருந்து போட்டுக் கொண்டனர்.

அதன்படி தற்போதைய ப்ரோமோவில் மஞ்சரி டெவில் அணியின் பிளானை தாக்குப் பிடிக்க முடியாமல் கோபப்படுகிறார். இதனால் அவரிடம் இருந்த ஹார்ட் பறிபோகிறது. ஆனாலும் அவர் தன் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் விளையாட தெரிஞ்சா விளையாடுங்க என சண்டைக்கு நிற்கிறார்.

அந்த புரோமோ தற்போது வெளியாகியுள்ள நிலையில் ஆடியன்ஸ் நேத்து பவித்ராவை கொடுமைப்படுத்தும் போது நல்லா இருந்துச்சா. உனக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு தக்காளி சட்னியா என அவரை ரோஸ்ட் செய்து வருகின்றனர்.

Trending News