Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் சிவக்குமார் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேற்றப்பட்டார். ஆனால் ஓட்டு நிலவரம் படி சாச்சனா தான் கடைசி இடத்தில் இருந்தார் என அனைவருக்கும் தெரியும்.
ஆனாலும் பிக் பாஸ் டீம் சிவகுமாரை வெளியேற்றியது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் அவர் ஓட்டு எண்ணிக்கை படி ஆறாவது இடத்தில் இருந்தார். அப்படி இருந்தும் வெளியேறியது நிச்சயம் நியாயம் இல்லாததுதான்.
இதைத்தான் தற்போது பிக் பாஸ் பார்வையாளர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். நிச்சயம் இதில் விஜய் டிவியின் உள்குத்து இருக்கும். சாச்சனாவை ஏதோ ஒரு காரணத்திற்காக அவர்கள் காப்பாற்றுகிறார்கள் என்பது இப்போது உறுதியாகி உள்ளது.
விஜய் சேதுபதி மீது கோபத்தில் இருக்கும் சுஜா வருணி
இதில் விஜய் சேதுபதியை தான் பலரும் திட்டிக்கிட்டிருக்கின்றனர். அவர்தான் தன்னுடைய ரீல் மகளை காப்பாற்ற ஏதாவது செய்திருக்க வேண்டும் என எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. அதே போல் சிவகுமாரின் மனைவி சுஜாவும் தன் கோபத்தை மறைமுகமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
அதன்படி தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் இந்த எவிக்ஷன் நியாயம் இல்லாதது என வந்த ட்விட்டர் பதிவுகளை ஷேர் செய்துள்ளார். மேலும் தன் கணவர் குறித்தும் பெருமையாக பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அதில் சிவா அத்தானை சிலருக்கு பிடிக்கலாம் சிலருக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் அவருடைய மனைவி என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு பெருமையாக இருக்கிறது. எல்லோரும் சுஜாவின் கணவர் என அவரை குறிப்பிடுகின்றனர்.
ஆனால் சிவகுமாரின் மனைவி தான் சுஜா என்று சொல்லும் நாள் தொலைவில் இல்லை என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.