தமிழ் சினிமாவின் சிறந்த கமர்சியல் இயக்குனர் என பெயரெடுத்த கேஎஸ் ரவிக்குமார் சமீபகாலமாக படம் இயக்குவதில் இருந்து விலகி நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவரது அடுத்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஒருவர் ஹீரோவாக நடிக்க உள்ளாராம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல் ஆகிய இருவருக்கும் பலர் கமர்ஷியல் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் தான் கேஎஸ் ரவிக்குமார். இன்று முன்னணியில் இருக்கும் அனைத்து நடிகர்களுடனும் பணியாற்றி விட்டார்.
கடைசியாக கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் என்றால் உலக நாயகன் கமலஹாசன் 10 வேடங்களில் நடித்த தசாவதாரம் படம் தான். அதன் பிறகு கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய படங்கள் சுமாரான வெற்றியை கூட பெறவில்லை.
இந்நிலையில்தான் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வரும் கேஎஸ் ரவிக்குமார் இந்த முறை வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் தமிழ் ரீமேக்கில் வயதான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். மேலும் இந்த படத்தில் கேஎஸ் ரவிக்குமார் மகனாக பிக் பாஸ் சீசன் 3 பிரபலம் தர்ஷன் ஹீரோவாக நடிக்க உள்ளாராம்.
மலையாள சினிமாவில் மிக குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி பல கோடிகளை வாரி குவித்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் தமிழ் ரீமேக் கேஎஸ் ரவிக்குமாரின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.