நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான நடிகை ஒருவர் முன்னணி நடிகரின் பெயரை தன்னுடைய முன்னழகில் பச்சை குத்தியுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆட்டிப்படைத்து வருகிறது.
தமிழைப் போலவே மற்ற மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தெலுங்கில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் தான் அஷு ரெட்டி. ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தும் இறுதிப் போட்டி வரை செல்ல முடியாமல் வெளியேறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு சினிமாவில் ஆர்வம் காட்டிவரும் அஷு ரெட்டி அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணம் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் அஷு ரெட்டி பிரபல நடிகர் பவன் கல்யாணின் தீவிர ரசிகராம். அவர் சொன்னால் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கும் அளவுக்கு வெறி பிடித்த ரசிகையாம்.
சமீபத்தில்கூட பவன் கல்யாணை சந்தித்த புகைப்படத்தையும் அவர் தனக்கு கொடுத்த கடிதத்தையும் ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார். மேலும் பவன் கல்யானின் தீவிர ரசிகையான அஷு ரெட்டி தன்னுடைய முன்னழகில் அவருடைய பெயரை பச்சை குத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம்தான் இணையத்தில் காட்டுத் தீ போல் வைரல் ஆனது. மேலும் பவன் கல்யாணுக்கு இப்படி ஒரு ரசிகையா என அனைவரும் ஆச்சரியப்பட்டு விட்டார்களாம். இருந்தாலும் ஒரு செலிபிரிட்டி இந்த மாதிரி பண்ணலாமா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். குத்துன இடம் அப்படி!