புதன்கிழமை, ஜனவரி 8, 2025

யாஷிகா ஆனந்த் வாழ்க்கையிலும் கதகளி ஆடியுள்ள பிக்பாஸ் பாலாஜி? சந்து கிடச்சா சிந்து பாடுறாரு!

தோண்டத் தோண்ட தங்கம் கிடைப்பது போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் என்பவரின் வாழ்க்கையை கிளறக் கிளற பல காதல் கதைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதில் எந்த அளவுக்கு உண்மை என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும்.

நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன்4 நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தைப் பெற்றவர்தான் பாலாஜி முருகதாஸ். பாலாஜி ஆரம்பத்திலிருந்தே பிக் பாஸ் வீட்டில் முரட்டுத்தனமான ஆளாக வலம் வந்தார். அதன் பிறகு கமல் சிறுபிள்ளை போல் தட்டி கொடுத்து இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார்.

ஆரம்பத்தில் பாலாஜி முருகதாஸ் செயல்கள் அனைவருக்கும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில் போகப்போக அவருக்கும் தனி ஒரு ரசிகர் பட்டாளம் உருவாக ஆரம்பித்தது. அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் வீட்டிற்குள் சக போட்டியாளரான ஷிவானி நாராயணன் என்பவர் உடன் நெருக்கமாக காணப்பட்டார்.

ஷிவானியும் பாலாஜி முருகதாசை நம்பி காதலில் விழ, ஒரு கட்டத்தில் காதல் சர்ச்சைகளில் சிக்கினால் தன்னுடைய இமேஜ் குறைந்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விடுவோமோ என்று பாலாஜி எண்ணினாரா எனத் தெரியவில்லை. உடனடியாக சிவானி உடனான காதலை நட்பு என கூறி முடித்துக் கொண்டார்.

பாலாஜி பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போதே வெளியில் பெண்களுடன் பார்ட்டிகளில் கலந்து கொண்டு அவர்களுடன் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மாடல் என்றால் இதெல்லாம் சர்வ சாதாரணம் தான் என அவருக்கு சப்போர்ட் செய்யவும் ஒரு கூட்டம் இருந்தது.

இந்நிலையில் பாலாஜி மாடலிங் துறையில் இருக்கும் போது சக மாடலிங் பொண்ணான யாஷிகா ஆனந்த் உடன் காதலில் இருந்ததாக தற்போது ஒரு செய்தி வெகு வேகமாக பரவி வருகிறது. இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும் கூறுகின்றனர்.

yashika-balaji-cinemapettai
yashika-balaji-cinemapettai

ஆனால் இந்த விஷயத்தை ஆரம்பத்திலேயே கேட்டறிந்த யாஷிகா ஆனந்த், இருவரும் நீண்ட கால நண்பர்கள் மட்டும் தான் எனக் கூறி அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இருந்தாலும் இன்னும் கொஞ்சம் உசுப்பேற்றினால் ஏதாவது உண்மை கிடைக்குமா என மீண்டும் மீண்டும் யாஷிகா மற்றும் பாலாஜியை பற்றி கோலிவுட் வட்டாரங்களில் கிசு கிசு பேசுகிறார்களாம்.

Trending News