வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

நீங்களாச்சு உங்க பிக்பாஸாச்சு ஆள விடுங்க.. மூட்டை முடிச்சை கட்டி தெறித்து ஓடிய பிரதீப்

Pradeep Antony: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர்களும் இருக்கிறார்கள். அதே போல் இருந்த புகழை கெடுத்துக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். ஆனால் நிகழ்ச்சியை விட்டு கெட்ட பெயருடன் வந்தாலும் வெளியில் அதிக புகழ் பெற்ற ஒரே ஒருவர் பிரதீப்பாக மட்டும் தான் இருக்க முடியும்.

அந்த அளவுக்கு அவருக்கு கொடுக்கப்பட்ட ரெட் கார்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இன்னும் சொல்லப்போனால் கமலை ரசிகர்கள் கடித்து குதறும் அளவுக்கு வெறியோடு இருந்தனர். இதுவே விஜய் டிவியின் டிஆர்பியையும் சரசரவென உயர்த்தியது.

அதைத்தொடர்ந்து பல பிரபலங்கள் பிரதீப்புக்கு ஆதரவாக சோசியல் மீடியாவில் குமுறினார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட அந்த தாடி பாய் என்ன நடந்தது என்பதை இதுவரை வெளியில் சொல்லாமல் அமைதி காக்கிறார். இந்த சூழ்நிலையில் அவர் போட்டுள்ள ஒரு ட்வீட் வேற லெவலில் இருக்கிறது.

Also read: பிக்பாஸ் வீட்டில் பொய் சொல்லும் நிலை வந்தது, பிரதீப் என்னை மன்னிச்சிடுங்க.. ஐஷுவின் உருக்கமான கடிதம்

அதில் அவர் சரி ஜாலியா இருந்துச்சு. இப்ப ஒரு 4, 5 தயாரிப்பாளர்கள் என்ன நம்பி கதையை கேட்கிறாங்க. அதனால நான் IFFI கோவா 2024 நிகழ்வுக்கு கிளம்புறேன். அங்க ஒரு நாலு வெளிநாட்டு படத்தை பார்த்து கதையை திருடி ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டு வரேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஆள விடுங்க நீங்களாச்சு உங்க பிக்பாஸ் ஆச்சு போயிட்டு வரேன் நல்லா இருங்க என வழக்கமான குசும்பையும் காட்டி இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் உங்க படத்துக்காக மரண வெயிட்டிங் என வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமின்றி நேற்று ஐசு நீண்ட மன்னிப்பு கடிதம் ஒன்றை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார்.

Also read: திட்டம் போட்டு இதெல்லாம் செய்றீங்களா.. ஆண்டவரின் அதிரடியால் வாயடைத்துப் போன விச்சு, அச்சு

அதில் முக்கியமாக பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்தது தவறு என்றும் சாரி என்றும் குறிப்பிட்டு இருந்தார். இது வைரலான நிலையில் பிரதீப்பின் பதிலடி என்னவாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவரோ விட்டால் போதும் என மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு கோவாவுக்கு கிளம்பிவிட்டார்.

pradeep-tweet
pradeep-tweet

Trending News