செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கண்ணீர் கடலில் தத்தளிக்கும் பிக்பாஸ் வீடு.. கேம் சேஞ்சராக வரும் உறவுகளால் மாறுமா ஆட்டம்.?

Biggboss 7: இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலரும் எதிர்பார்த்த சம்பவம் நடக்க இருக்கிறது. ஒவ்வொரு சீசனிலும் இதற்காகத்தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள். அதன்படி இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் அன்பு மட்டுமே நிறைந்திருக்க போகிறது.

அதாவது இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் ஃப்ரீஸ் டாஸ்க் நடக்க இருக்கிறது. 75 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் போட்டியாளர்கள் இந்த வாரம் தங்களுடைய உறவுகளை பார்க்க போகிறார்கள். அதனால் வீடு கண்ணீர் கடலில் தத்தளிக்க இருக்கிறது.

Also read: பிரதீப்பிற்கு பின் மொத்தமாய் படுக்க இருந்த பிக்பாஸ்.. டிஆர்பியை தூக்கி நிறுத்தியது யாரு தெரியுமா?

அதற்கான ப்ரோமோ தான் இப்போது வெளியாகி உள்ளது. அதில் பிக்பாஸ் இந்த அறிவிப்பை கொடுத்ததுமே ஒட்டுமொத்த போட்டியாளர்களும் குதூகலமாகி விட்டனர். அதைத்தொடர்ந்து பூர்ணிமா, தினேஷ், விஜய் வர்மா, சரவணன் விக்ரம், அர்ச்சனா ஆகியோரின் குடும்பங்கள் ஒவ்வொருவராக உள்ளே வருகின்றனர்.

இவ்வளவு நாட்கள் ஒரே வீட்டில் அடைப்பட்டு கிடந்த போட்டியாளர்கள் தங்களுடைய பெற்றோர்களை பார்த்ததுமே ஓடிப் போய் கட்டி தழுவுகின்றனர். இந்த அழகான நிகழ்வுகள் இந்த வாரம் முழுவதும் காட்டப்பட இருக்கிறது. இதனால் பிக் பாஸ் ஆட்டம் மாறவும் வாய்ப்பு இருக்கிறது.

Also read: இந்த வாரம் பிக்பாஸ் விரட்டி விடப்போகும் மொக்க பீஸ்.. 42% வாக்குகளை சூறையாடிய கில்லி, சூடு பிடிக்கும் ஓட்டிங்

ஏனென்றால் இதற்கு முன்பு நடந்த சீசனில் வீட்டுக்குள் வரும் உறவுகள் ஏதாவது ஒரு ஹின்ட் கொடுப்பார்கள். அதில் சிலர் பகிரங்கமாகவே தங்கள் பிள்ளைகளை எச்சரித்த கதையும் நடந்திருக்கிறது. அந்த வகையில் கேம் சேஞ்சராக வரப்போகும் குடும்பத்தினர் அடுத்த வார ஆட்டத்தை மாற்றுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

Trending News