சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

டாஸ்க் கொடுத்தா ஓவர் ஆக்டிங்கா போடுற.. டிராமா குயினுக்கு பிக்பாஸ் கொடுத்த தண்டனை

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் அலசுவதற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறது. முதலில் மஞ்சரி ஒரு பஞ்சாயத்தில் சிக்கினார். அதன் பிறகு டெவில் தேவதைகள் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அதில் சாத்தான்கள் கொஞ்சம் ஓவர் டோஸாக போனார்கள். இதில் மஞ்சரி பவித்ராவை டார்ச்சர் செய்ததற்கு விஜய் சேதுபதியிடம் அவர் பதில் அளிக்க நேரிடும்.

அதேபோல் தேவதையாக இருந்த போதும் அவர் டெவில் ரேஞ்சில் நடந்து கொண்டதும் சிறப்பாக இல்லை. இப்படியாக இரண்டு நாட்கள் பரபரப்பாக நகர்ந்த நிலையில் தற்போது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் இந்த வாரம் சுவாரஸ்யம் இல்லாத நபர்கள் யார் என பிக் பாஸ் கேள்வி கேட்கிறார். உடனே போட்டியாளர்கள் அனைவரும் ஜாக்லின் மற்றும் சௌந்தர்யாவை தேர்ந்தெடுக்கின்றனர்.

ஏனென்றால் அவர்கள் டெவிலாக இருந்த போதும் தங்கள் வேலையை ஒழுங்காக செய்யவில்லை. அதேபோல் தேவதையாக இருந்த போதும் அப்படித்தான் இருந்தனர்.

பிக்பாஸிடம் சிக்கிய ஜாக்லின் சௌந்தர்யா

அதிலும் ஜாக்லின் கொஞ்சம் அதிகப்படியாக போய் ஓவர் டிராமா போட்டார். இதில் நேற்று ரஞ்சித் எதுவும் சொல்லாத போதே உங்கள அப்பா ஸ்தானத்தில் வெச்சிருந்தேன்.

இப்படியா பேசுவீங்க என பிரச்சனையை வேற ரூட்டுக்கு மாற்றினார். அதைப் பார்த்த நாம் கூட மனுஷன் ஏதோ பேசக்கூடாததை பேசிட்டாரு போல என நினைத்தோம்.

ஆனால் நிகழ்ச்சியை பார்க்கும் போது ஒண்ணுமே இல்லை. தேவையில்லாமல் சீன் கிரியேட் செய்தது ஜாக்குலின் தான். அதை மனதில் வைத்தே போட்டியாளர்கள் இவர்கள் இருவரையும் தேர்ந்தெடுத்துள்ளனர்.

அவர்களுக்கு பிக் பாஸ் கொடுத்த நூதன தண்டனை நிச்சயம் இவர்களுக்கு வேண்டும் தான் என நினைக்க வைத்துள்ளது. அதன்படி இருவருக்கும் உப்பில்லாத சாப்பாடு கொடுத்து சாப்பிட வைத்திருக்கிறார் பிக் பாஸ்.

டாஸ்க் கொடுத்தா ஓவர் ஆக்டிங்கா போடுறீங்க என அவர் சொல்லாமல் சொல்லிவிட்டார். மேலும் ஜாக்லின் ஏதோ அன்னை தெரசா போலவும் சௌந்தர்யா குட்டி தெரசா போலவும் நடந்து கொண்டதற்கு இது சரியான தண்டனை தான்.

Trending News