வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஒன்னு கூடி ஒப்பாரி வைக்கும் ஹவுஸ் மேட்ஸ்.. TRP-க்காக இதெல்லாம் ஒரு டாஸ்க்கா பிக்பாஸ்

Biggboss7: பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது ஐம்பது நாளை கடந்து விட்டது. ஆனாலும் போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்க் ஒன்றும் வழங்கப்படவில்லை. என்றாவது ஒருநாள் அத்தி பூத்தார் போல் இது போன்ற டாஸ்க் அமைகிறது. மத்தபடி சுவாரசியமே இல்லை என்பது தான் ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

அதிலும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் போட்டியாளர்கள் நீ நான் என மாறி மாறி ஒப்பாரி வைத்து வருகின்றனர். அதாவது பிக்பாஸ் ஹவுஸ் மேட்சை அவர்களை தடுமாறச் செய்த வாழ்க்கை சம்பவங்களை பற்றி கூற சொல்கிறார்.

உடனே அனைவரும் இப்ப பாரு எப்படி ஸ்கோர் பண்ணுறேன்னு தங்கள் கஷ்டங்களை சொல்லி மற்றவர்களை அழ வைக்கின்றனர். அதில் மாயா தனக்கு ஒரு பிரச்சனை இருந்ததைப் பற்றி கூறுகிறார். அதை தொடர்ந்து ஜோவிகா தன் பாட்டி இறந்த விஷயத்தை கூறி அழுகிறார்.

Also read: என்ன தரையில பேசினதெல்லாம் திரையில வருது.. பிக்பாஸ் மைண்ட் வாய்ஸை கேட்ச் செய்த விஷ்ணு

மேலும் தினேஷ் தன் மனைவி ரட்சிதாவை பிரிந்தது பற்றி வருத்தத்துடன் கூறுகிறார். இப்படியாக வெளியாகி உள்ள இந்த ப்ரோமோவை பார்த்த ஆடியன்ஸ் இதெல்லாம் ஒரு டாஸ்க்கா என கேலி செய்து வருகின்றனர். ஆக மொத்தம் விஜய் டிவியின் டிஆர்பிக்கு ஆடியன்ஸ் தான் பலிகடாவாகி வருகின்றனர்.

இப்படியாக இன்றைய எபிசோட் சூர மொக்கையாக தான் நகரும் என்று ப்ரோமோவை பார்க்கும் போதே தெரிகிறது. இதற்கு முந்தைய சீசன்களில் ஆவது பல கடுமையான டாஸ்க் இருந்தது. ஆனால் இந்த சீசன் முழுவதும் யாரை துரத்துவது என வில்லத்தனம் செய்தே போட்டியாளர்கள் பொழுதை கழித்து வருகின்றனர்.

இதனாலேயே பிரதீப் வர மாட்டார் என்று தெரிந்தும் கூட ரசிகர்கள் அப்படி ஒன்று நடந்து விடாதா என ஏங்குகின்றனர். ஒருவேளை அவர் மட்டும் வீட்டில் இருந்திருந்தால் நிச்சயம் மொக்கையான டாஸ்க் கூட சர்ச்சையாக முடிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

Also read: அவன காலி செய்ய வேண்டிய நேரத்துல பண்ணுவேன்.. புகழ் போதைக்கு அடிமையான பிக்பாஸ் ராஜமாதா

Trending News