பிக்பாஸ் கவின் தான் அடுத்த சிவகார்த்திகேயன்.. லிப்ட் படம் குறித்து வந்த முதல் விமர்சனம்

kavin
kavin

இன்று சின்னத்திரையில் பிரபலமான நடிகர்களாக வலம் வரும் பலருக்கும் சிவகார்த்திகேயன் பெரிய இன்ஸ்பிரேஷன் ஆக இருந்து வருகிறார். அவரைப் பார்த்து பலரும் சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கின்றனர்.

அதேபோல் சில நடிகர்களுக்கும் அடுத்தடுத்து சில பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. ஆனால் அவர்கள் எல்லாம் சிவகார்த்திகேயன் போல் வெற்றிப்படங்களை கொடுத்து தங்களுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்வார்களா என்பதுதான் அடுத்த கேள்வி.

விஜய் டிவியிலிருந்து எந்த ஒரு பிரபலம் சினிமாவுக்கு வந்தாலும் அவர்தான் அடுத்த சிவகார்த்திகேயன் என்று கூறி அவர்களை பூரிப்படைய வைத்து அடுத்த சில படங்களிலேயே திரும்பவும் விஜய் டிவிக்கு அனுப்பி வைத்துவிடுகின்றனர்.

அந்தவகையில் ரியோ சில படங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பெரிய வரவேற்பை பெற்ற கவின் லிப்ட் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை பார்த்த பலரும் படம் செமையாக இருப்பதாக கூறி வருகின்றனர்.

ஏற்கனவே கவின் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தில் நடித்திருந்தாலும் லிப்ட் திரைப்படம் அவருடைய சினிமா கேரியரை சிவகார்த்திகேயன் ரேஞ்சுக்கு மாற்றும் என கூறியுள்ளனர்.

லிப்ட் படத்தில் கவினுக்கு ஜோடியாக பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் ஜோடி போட்டுள்ளார். வினித் வரப்பிரசாதம் இயக்கியுள்ள இந்த படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனவும் ஒரு கருத்து பரவலாக உள்ளது.

kavin-amritha-lift-movie
kavin-amritha-lift-movie
Advertisement Amazon Prime Banner