பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானவர் லாஸ்லியா. ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 3வது சீசனில் பங்கு பெற்றதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு தெரியக்கூடிய ஒருநடிகையானார்.
பிக்பாஸ் மூலம் லாஸ்லியாவுக்கு ஓரளவு ரசிகர்கள் உருவாக்கியதால் தற்போது விளம்பரங்கள் மற்றும் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. சமீபத்தில் கூட லாஸ்லியா மற்றும் குக் வித்த கோமாளியில் பங்குபெற்ற அஸ்வின் இவர்கள் இருவரும் இணைந்து சோப்பு விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளனர்.
லாஸ்லியாவுக்கு விளம்பரங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தாலும் இன்னும் பெரிய பெரிய நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் தற்போது வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அதாவதுமற்ற நடிகைகள் எல்லாம் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் உடனே சமூக வலைதளப் பக்கத்தில் சென்று ஏதாவது ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி பின்பு வாய்ப்பை வாங்கிக் கொள்வார்கள்.
தற்போது அதே கொள்கையைத்தான் லாஸ்லியாவின் பின்பற்றுகிறார். அதாவது வெள்ளை உடையுடன் போட்டோஷூட் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறார்.
ஆனால் சினிமாவாசிகள் புகைப்படத்தை நம்பி வாய்ப்பை தேடுவதை விட ஏதாவது நடிப்பை வெளிப்படுத்தினால் கூட சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறி வருகின்றனர்.