23 வயது மதிக்கத்தக்க இளம் பிக் பாஸ் பிரபலத்திடம் ரசிகர்கள் அத்துமீறி தங்களுடைய சமூக வலைதளங்களில் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தி கொச்சையாக பேசியுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாடகியாக தெலுங்கு சினிமாவில் பிரபலமானவர்தான் மது ப்ரியா. அடிப்படையில் பாடகியான இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்து அதன் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
பார்க்க அழகாகவும் இளமையாகவும் இருக்கும் இந்த பாடகியை யாருக்குத்தான் பிடிக்காது. அப்படிப்பட்ட மது பிரியாவை தொடர்ந்து தினமும் தங்களுடைய சமூக வலைதளங்களின் மூலம் அவருக்கு அவதூறு செய்திகளை அனுப்பி வந்துள்ளனர்.
மேலும் இரவு நேரங்களில் போன் பண்ணி அசிங்க அசிங்கமாக பேசியதாகவும் தெரிகிறது. இதனால் பொறுமையிழந்த மது பிரியா நேராக போலீசாரிடம் சென்று நடந்ததைக் கூறி கம்ப்ளைன்ட் பதிவு செய்துள்ளார்.
மேலும் இந்த கேசை சைபர் கிரைம் அதிரடியாக கையாண்டுள்ளது. தொடர்ந்து மது பிரியாவிடம் அசிங்கமாக பேசியவர்களின் போன் நம்பர்கள் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் உள்ள தகவல்களை கொண்டு அவர்கள் மீது பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சமீபகாலமாக ரசிகர்கள் அசிங்கமாக பேசுவதற்கு பிரபலங்கள் பதிலடி கொடுத்து வருவது அதிகமாகி வருகிறது. நாளுக்கு நாள் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் அத்துமீறல்கள் அதிகமாக இருப்பதை இதுபோன்று கண்டித்தால்தான் சரிபட்டு வரும் என்கிறது சினிமா வட்டாரம்.