வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

பாத்டப்பில் படுத்தபடி போஸ் கொடுத்த பிக்பாஸ் மது.. இப்பவே அளப்பறைய ஆரம்பிச்சிட்டீங்களா

விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோ பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் மதுமிதா. இலங்கையில் பிறந்த மதுமிதா தற்போது ஜெர்மனியில் வசித்துவருகிறார். அங்கு ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வரும் இவர் ஒரு பேஷன் டிசைனர் மற்றும் மாடல் ஆவார். அவர் என்ஜாய் எஞ்சாமி, ரவுடி பேபி என்ற பாடலை பாடிய பிரபல பாடகி ‘தீ’ யின் நெருங்கிய தோழி ஆவார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தீவிர ரசிகையாக இருக்கும் மதுமிதா பல முயற்சிகளுக்குப் பிறகு பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டுக்குள் அவர் அழகாக கொஞ்சும் தமிழில் பேசுவது ரசிகர்களிடையே மிகவும் பிரபலம்.

இவ்வாறு அனைவருக்கும் பிடித்த போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் வலம் வந்த மதுமிதா சில நாட்களுக்கு முன்னர் எவிக்ட் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் அவரின் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் பிக்பாஸ் வீட்டை விட்டு சந்தோஷமாக வெளியே வந்த மதுமிதா தற்போது யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுப்பதில் பிசியாக உள்ளார். மேலும் தன்னுடைய அழகான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்தும் வருகிறார். தற்போது மதுமிதா குளியலறையில் பாத்டப்பில் படுத்திருக்கும் படி போஸ் கொடுத்துள்ள போட்டோவை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்துள்ளார்.

இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலரும் மதுமிதா ஹாட்டி, பியூட்டி என்று புகழ்ந்து வருகின்றனர். சினிமாவில் ஒரு நடிகையாக வேண்டும் என்று ஆர்வத்துடன் இருக்கும் மதுமிதா தற்போது அதற்கான வேலையில் இறங்கியுள்ளார்.

தன்னுடைய அழகான பேச்சாலும் குணத்தாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த மதுமிதா விரைவில் நடிகை ஆகி ரசிகர்களின் மனதை கவர்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

madhumita
madhumita

Trending News